நடிகை யாஷிகா தற்கொலை! இறப்பதற்கு முன் அனுப்பிய உருக்கமான வாட்ஸ்-அப் பதிவு

காதலன் மோகன்பாபுவுக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்

திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்ற யாஷிகா(வயது 21). சினிமாவில் துணை நடிகையாகவும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து உள்ளார். விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

சென்னை வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த யாஷிகாவுக்கு, செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்துவந்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபுவை காதலித்து வந்ததாக தெரிகிறது. திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த 4 மாதங்களாக பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 22-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக யாஷிகாவிடம் கோபித்துக்கொண்டு மோகன்பாபு, பெரம்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு யாஷிகா, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெரவள்ளூர் போலீசார், தூக்கில் தொங்கிய யாஷிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் யாஷிகா, தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, “நம்பி வந்த என்னை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்ளாமல் கொடுமைப்படுத்திய காதலன் மோகன்பாபுவுக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்” என தனது தாயாருக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். உலகம் முழுக்க இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதல் விவகாரத்தால் துணை நடிகை யாஷிகா தற்கொலை செய்துக் கொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close