இயக்குநர்களை காதலித்து கரம் பிடித்த நடிகைகள் – கலர்ஃபுல் படங்கள்!

ஒன்றாக வேலை பார்க்கும் போது பரஸ்பரமாக பிடித்துப் போவது இயல்பு தானே!

By: Updated: February 28, 2020, 02:21:57 PM

Tamil Actresses who married to Directors : நடிகைகள் சக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தன்னுடன் பணிபுரிந்தவர்களையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வது, உலகெங்கிலும் உள்ளது. ஒரே யூனிட்டில், சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை ஒன்றாக வேலை பார்க்கும் போது பரஸ்பரமாக பிடித்துப் போவது இயல்பு தானே! சரி இயக்குநர்களை திருமணம் செய்துக் கொண்ட நடிகைகளை இங்கே குறிப்பிடுகிறோம். திருமணம் செய்து பிறகு விவாகரத்தானவர்களை இங்கே தவிர்த்துள்ளோம்.

சுஹாசினி மணிரத்னம்

Actresses who married to directors, Suhasini Maniratnam மணி ரத்னம் – சுஹாசினி எந்த படத்திலும் ஒன்றாக வேலை செய்யவில்லை என்றாலும், அவர்கள் காதலித்து இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.

பூர்ணிமா பாக்யராஜ்

Poornima Bhagyaraj டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு ஆகியப் படங்களை இயக்கி நடித்த பாக்யராஜுடன் பூர்ணிமா நடித்திருப்பார். பின்னர் இவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். சரண்யா, சாந்தனு என இரு பிள்ளைகள் இவர்களுக்கு உள்ளனர்.

குஷ்பு சுந்தர் சி

Actresses who married to directors, Khushbu Sundar C சுந்தர் சி-குஷ்பு தமிழ் சினிமாவில் வெற்றிகரமான மற்றொரு ஜோடி. முறை மாமனுக்குப் பிறகு, சுந்தர் சி குஷ்புவிடம் காதலை சொல்ல, இறுதியில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தேவயானி ராஜகுமாரன்

Devayani Rajakumaran, Actresses who married to directors, குடும்பத்தாரின் எதிர்ப்புகளை மீறி இயக்குநர் ராஜகுமாரனை மணந்துக் கொண்டார் தேவயானி. இவர்கலுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ரம்யா கிருஷ்ண வம்சி

Ramya Krishnan - Krishna Vamsi, Actresses who married to directors, நடிகை ரம்யா கிருஷ்ணன் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிருஷ்ணா வம்சியை 2003-ல் திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார்.

ரோஜா செல்வமணி

Roja Selvamani, Actresses who married to directors, ஆர்.கே.செல்வமணி ரோஜாவை செம்பருத்தி படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர், இவர்கள் காதலித்து 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ப்ரீத்தா ஹரி

Preetha Hari, Actresses who married to directors, ஹரியும் ப்ரிதாவும் எந்த படத்திலும் ஒன்றாக வேலை செய்யவில்லை என்றாலும், இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

பிரியா அட்லீ

Priya Atlee, Actresses who married to directors, இயக்குனர் அட்லீயும் பிரியாவுடன் பணியாற்றவில்லை. அவர் வாய்ப்புகளுக்காக போராடும் நடிகையாக இருந்தார், ஆனால் விஜய் டிவி-யின் மூலம் ஏற்கனவே தெரிந்த அவரை காதலித்தார் அட்லீ. இயக்குநரின் முதல் படமான, ராஜா ராணி வெளியானதைத் தொடர்ந்து, 2014-ல் இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil actresses who married to directors

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X