தொழில் அதிபருடன் திருமணத்தை உறுதி செய்த நடிகை ஹன்சிகா…. வைரலாகும் நிச்சய புகைப்படங்கள்

மும்பையை சேர்ந்த நடிகை ஹன்சிகா, கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொழில் அதிபருடன் திருமணத்தை உறுதி செய்த நடிகை ஹன்சிகா…. வைரலாகும் நிச்சய புகைப்படங்கள்

முன்னணி நடிகையான ஹன்சிகா தொழிலதிபருடன் காதலை உறுதி செய்துள்ள நிலையில், தனது நிச்சியதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த நடிகை ஹன்சிகா, கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மகா திரைப்படம் கலவையாக விமர்சனங்களை பெற்றது. தற்போது ரவுடி பேபி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, நஷா மைத்ரி உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் சிம்புவை ஹன்சிகா காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே இந்த காதல் முடிவுககு வந்தது.  

இதனிடையே தற்போது  நடிகை ஹன்சிகா தனது தொழிலதிபருடனான தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது காதலரும் பிஸினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட படங்களைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹன்சிகா, இப்போது&எப்போதும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாரிஸில் உள்ள ஈபிள் டவரின் முன் ஹன்சிகாவிடம் சோஹைல் லவ் ப்ரபோஸ் செய்வது போன்ற அந்த புகைப்படத்தில், ஒரு ஃபீல்-குட் ரொமான்டிக் திரைப்படத்தின் அனைத்து அம்சங்களும் இருப்பது போல் உள்ளது. இதில் ஹன்சிகாவுக்கு ப்ரோபோஸ் செய்ய சோஹைல் ஒரு மண்டியிட்டுள்ள புகைப்படம் இணைந்துள்ளது.

இதில் சோஹைல் கருப்பு நிற உடையில் இருப்பதால், ஹன்சிகா ஸ்ட்ராப்லெஸ் வெள்ளை ஆடை அணிந்துள்ளார். வருண் தவான், அனுஷ்கா ஷெட்டி, கரண் ஜோக்கர், பிவி சிந்து, ஷிவலீகா ஓபராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ஹன்சிகா திருமணம் செய்து கொள்வார் என்று பல நாட்களாகவே யூகங்கள் நிலவி வருகின்றன.

ஆனாலும் இது குறித்து ஹன்சிகா எவ்வித உறுதியும் அளிக்கவில்லை. டிசம்பர் முதல் வாரத்தில் அவருக்கு திருமணம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என ஒரு பிரிவினர் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர். இருப்பினும், இந்த ஜோடி ஜெய்ப்பூரில் திருமணத்தை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று நாள் திருமண விழாக்களுக்காக தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஜெய்ப்பூருக்கு பறக்க உள்ளனர். டிசம்பர் 2 முதல் 4ம் தேதிக்குள் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actresshansika motwani announces her engagement to sohail kathuria

Exit mobile version