அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட ஷிவாங்கி :அப்படி என்னதான் செய்தார்?

Aith Fans Vs Shivangi : அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஷிவாங்கி பற்றி கடுமையக ட்ரோல் செய்து வரும் நிலையில், அவருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல் பாடி புகழ்பெற்ற ஷிவாங்கி, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிகழ்ச்சியின் 2 சீசன்களிலும் கலந்துகொண்ட அவர், சக கோமாளிகளான புகழ் மற்றும் குக் அஸ்வினுடன் இணைந்து காமெடியில் கலக்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது அவருக்கு சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டிருக்கும் நிலையில்,  சிவகார்த்திகேயனின் டான் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில், ஷிவாங்கி மற்றும் அஸ்வின் இருவரும் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சிவாங்கிக்கு பெரும் பிரச்சிணையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியை எடுத்த குக் வித் கோமாளி சக்தி, விஜய்யின் கடைசி படம் என்ன என கேட்டபோது ‘மாஸ்டர்’ என உடனே பதில் சொன்னார் ஷிவாங்கி. ஆனால் அஜித்தின் நடிப்பில் கடைசியாக வந்த படம் என்ன என கேட்டதற்கு பதில் தெரியாமல் விழித்தார்.

அஜித்தின் மற்ற பழைய படங்களின் பெயர்களை கூறிக்கொண்டிருந்த ஷிவாங்கியிடம் அஜித்தின் அடுத்த படத்தின் பெயரையாவது சொல் என கேட்டால்.. அதுவும் அவருக்கு தெரியவில்லை. இந்த வீடியோ சாக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஷிவாங்கியை திட்டி தீர்த்து மோசமான கமெண்டுகள் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் விஜய் ரசிகர்கள் தற்போது ஷிவாங்கிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். #IStandWithYouSivaangi என அவர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்சனை பற்றி ட்விட்டரில் பதிவிட்டு உள்ள ஷிவாங்கி ‘Inhale Positivity, Exhale Negativity’ என கூறி உள்ளார். ஆனாலும் ஷிவாங்கி ட்ரோல் செய்வதை அஜித் ரசிகர்கள் நிறுத்த்தாத நிலையில், ஜித் பற்றி தவறாக எதுவுமே பேசாத ஷிவாங்கி இப்படி சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil ajith fans troll cook with comali shivangi for youtube interview

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com