/indian-express-tamil/media/media_files/pB1wJpnlLQNQV12ZASsZ.jpg)
நடிகை டெல்னா டேவிஸ்
சன்டிவியின் அன்பே வா சீரியலில் பூமிகா கேரக்டரில் நடித்து வந்த நடிகை டெல்னா டேவிஸ் ரிஷிகேஷில் கங்கை உருவாகும் இடத்தில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
சன் டிவியின் அன்பே வா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டெல்னா டேவிஸ். இந்த சீரியலில் இவர் நடித்த பூமிகா கேரக்டருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிறப்பான வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் சமீபத்தில் பூமிகா கேரக்டர் இறந்துவிடுவதுபோல் காட்சி வைத்து ட்விஸ்ட் கொடுத்துவிட்டனர்.
இதனால் சீரியலில் இருந்து விலகிய டெல்னா டேவிஸ் தனது சுற்றுலா பயணத்தை தொ்ங்கியுள்ளார். தற்போது,ரிஷிகேஷின் அமைதியான அழகில் மகிழ்ச்சியாக திளைத்து வருகிறார்.அங்கே உள்ளூர் உணவு வகைகளை ருசிப்பது மட்டுமின்றி, ரிஷிகேஷின் இயற்கை எழில் சூழ்ந்த நிலப்பரப்புகளைக் கொண்ட கம்பீரமான மலைகளையும் கண்டு ரசித்து வருகிறார்.
பயணம் செய்வதில் ஆர்வம் கொண்ட டெல்னா, அவ்வப்போது தனது வலைதள பகக்த்தில் வசீகரிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள பயணத்தின் மயக்கும் புகைப்படங்கள் நிச்சயமாக அவரைப் சமூகவலைதளத்தில் பின்தொடர்பவர்களுக்கு நிச்சயம் நாமும் இப்படி ஒரு பயணம் போக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும்.
டெல்னா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், ரிஷிகேஷில், "கங்கை தனது கம்பீரமான பயணத்தைத் தொடங்கும் ராட்சதர்களின் காலடியில்" தலைப்பிட்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், அவர், பயணத்தின் மகிழ்ச்சியை மட்டுமல்ல, அவரது பயணத்தின் போது சந்தித்த இயற்கை அதிசயங்களுக்கான ஆழ்ந்த பாராட்டுகளையும் கொடுத்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2014 இல் விடியும் வரை பேசு என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக டெல்னா டேவிஸ், விதார்த், பாரதிராஜா இணைந்து நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட குரங்கு பொம்மை திரைப்படத்தில் விஜியாக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். 2020 ஆம் ஆண்டில், அன்பே வா என்ற சீரியலில் தனது தொலைக்காட்சி அறிமுகமானார், விராட் உடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.