scorecardresearch

90-ஸ் கிட்ஸ் பேவரெட்… பெப்சி உமா போல்… ராசிபலன் நாயகி ரீ-என்டரி

90-ஸ் கிட்ஸ்களின் மற்றொரு பேவரெட் ஆங்கரான விஜே விஷால் சுந்தர் மீண்டும் சின்னத்திரைக்கு வர உள்ளதாக கூறியுள்ளார்.

Vishal Sundar VJ
vj Vishal Sundar

சன்டிவியில் ராசிபலன் படித்து 90-ஸ் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்த விஜே விஷால் சுந்தர் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சினிமா மற்றும் சீரியல் நட்சத்திரங்களை கடந்து டிவி தொகுப்பாளர் செய்திவாசிப்பாளர் என பலருக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் தொகுப்பாளர்களாக இருந்து 90-ஸ் கிட்களில் மனதில் ஸ்ராங்கா இடம்பிடித்த பெப்சி உமா, விஜயசாரதி, செய்தி வாசிப்பாளர் ரத்னா, ஆனந்த கண்ணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் மீண்டும் என்ட்ரி கொடுப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதில் சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெப்சி உமா தான் மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு வர விரும்புவதாகவும், விரைவில் தன்னை பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார். இந்த தகவல் 90-ஸ் கிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது 90-ஸ் கிட்ஸ்களின் மற்றொரு பேவரெட் ஆங்கரான விஜே விஷால் சுந்தர் மீண்டும் சின்னத்திரைக்கு வர உள்ளதாக கூறியுள்ளார்.

சன்டிவியில் தினமும் ராசிபலன் படிக்கும் விஜே விஷால் சுந்தரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. மேஷராசி நேயர்களே என்று தொடங்கி மீன ராசிவரை அவர் பேசும் தமிழை பலரும் ரசித்து கேட்ட தருணங்கள் பல உள்ளன. காலை எழுந்தவுடன் பெரும்பாலான வீடுகளில் இவரின் குரல் ஒலிக்கும். டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே 18 ஆண்டுகள் சன்டிவியில் ராசிபலன் படித்து வந்த விஜே விஷால் சுந்தர், வேலை காரணமாக லண்டன் சென்றதால் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

தற்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்,  மேஷ ராசி நேயர்களே இன்று கோடை வெப்பம் அதிகமாக உள்ளதனால் தண்ணீர் பாட்டிலுடன் மட்டுமே செல்ல வேண்டும் என தொடங்கினார். தொடர்ந்து நான் மீண்டும் மீடியா துறைக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

எனக்கு பிடித்தமான வேலை செய்யும்போது மற்ற எல்லாமே நன்றாக இருக்கும். ஜோசியம் நான் வாசித்தாலும் ஜோசியத்தை நம்பி நான் என் வாழ்க்கையை நகர்த்த மாட்டேன். என் மகனுக்கு 21 வயதாகிறது. அவருக்கே நான் இன்னும் ஜாதகம் கணிக்கவில்லை.  

எங்களுக்கு ஜோசியர் எழுதி கொடுத்ததை நான் அப்படியே படித்தேன். அவருடையது சரியானது மற்றும் நல்ல ஜோசியம்தான். என்னுடைய ராசி துலாம். ஜோதிடரிடம் இருந்து ஸ்கிரிப்ட் வந்துவிட்டால் உடனே நானும் எனது உடையை என் ராசிக்கு ஏற்ற நிறத்தில் மாற்றி கொள்வேன். 2015 ஆம் ஆண்டு நான் சென்னையிலிருந்து பிரிட்டன் சென்றேன். நான் படித்து கொண்டே ராசி பலன் ஷோவை செய்தேன். மேலும் மீடியாவில் ஃபுல்டைம் ஷோ செய்தால் திருமணம் நடக்க வேண்டும்.

அவர்கள் மீடியா வேண்டாம் என சொல்லிவிட்டால் நம் கேரியரே வீணாகிவிடும். நான் எம்பிஏ படித்திருந்தேன். அதை வீணடிக்கக் கூடாது என்பதால் ஐடி துறையில் வேலை செய்துக் கொண்டே இந்த வேலையை பார்த்தேன். நான் மீடியாவில் இருக்கும்போது ரகுவரன் சாருடன் நடிக்க வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் அதை ஏற்க முடியவில்லை. 2-3 படங்கள் வந்தது. அதன்பிறகு நான் நடிக்க விரும்பவில்லை என்று தெரிந்து யாரும் வரவில்லை.

இப்போது மீண்டும் திரையில் என்டரி கொடுக்க விரும்புகிறேன் விரைவில் சீரியல் அல்லது சினிமாவில் என்னை பார்க்கலாம் என்று விஷால் சுந்தர் கூறியுள்ளார். அர்ச்சனா ரீ-என்டரி கொடுத்துவிட்ட நிலையில், செய்தி வாசிப்பாளர் ரத்னா சமூகவலைதளங்களில் பிஸியாக இருந்து வருகிறார். அதேபோல் சமீபத்தில் பெப்சி உமா மீண்டும் மீடியாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் தற்போது விஷால் சுந்தரும் தனது ரீ என்ட்ரியை அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil anchor suntv vishal sundar re entry in tamil television