Advertisment

அவங்க ஸ்டைல் வேற... எனக்கு செட் ஆகாது... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜே பாவனா

Tamil Reality Show Update : தனது தனித்திறமையின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வி.ஜே.பாவனா.

author-image
WebDesk
New Update
அவங்க ஸ்டைல் வேற... எனக்கு செட் ஆகாது... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜே பாவனா

Tamil Anchor VJ Bhavana Said Can't Come Again Vijay TV : தமிழில் அதிக ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகும் சேனல்களில் விஜய் டிவி முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் இதில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களுக்கும் சீரியல்களும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

Advertisment

அந்த வகையில் இப்போது பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் போன்றவர்கள் எல்லாம் தற்போதைய பிரபல தொகுப்பாளர்களாக உள்ளார்கள். இதில் தனது தனித்திறமையின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வி.ஜே.பாவனா. ஆனால் தற்போது இவர் ஸ்டார்ஸ் ஸ்போர்ட் தமிழ் சேனலில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனாலும் இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு இன்றளவும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பாவனாவுடன இணைந்து இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது விஜய் டிவியில் இருந்து சென்றுவிட்ட பாவனா மீண்டும் விஜய் டிவிக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பாவனா, தமிழில் கலர்ஸ் தமிழில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் மீண்டும் விஜய் டிவிக்கு வருவீர்களா என்ற கேள்வி அவரைச்சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ரசிகர்கள் பலரும் பாவனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள பாவனா தான் மீண்டும் விஜய் டிவிக்கு வர வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். அவர்களின் ஸ்டைல். அவர்கள் இப்போது நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதே வழக்கமாக வைத்தள்ளனர். என்னுடைய ஸ்டைலுக்கு அது சரியாக வராது. இதனால் நான் மீண்டும் விஜய் டிவிக்கு வர வாய்ப்பு இல்லை என்று அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment