scorecardresearch

ஏஜெண்ட் கண்ணாயிரம், பட்டத்து அரசன்.. நவம்பர் 25-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

திரையரங்குகள் மட்டுமல்லாமல் ரசிகர்களின் கையளவில் உள்ள திரையரங்கான ஒடிடி தளத்திலும் வெள்ளிக்கிழமையே திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன

ஏஜெண்ட் கண்ணாயிரம், பட்டத்து அரசன்.. நவம்பர் 25-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

வெள்ளிக்கிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அடுத்த நாள் சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் திரைப்படங்கள் வெள்ளிக்கிழமையே வெளியிடப்படுகின்றன. திரையரங்குகளில் இப்படி என்றாலும் ரசிகர்களின் கையளவில் உள்ள திரையரங்கான ஒடிடி தளத்திலும் வெள்ளிக்கிழமையே திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

அந்த வகையில் நாளை (நவம்பர் 25) திரையரங்கு மற்றும் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள படங்கள் :

நவம்பர் 25 தமிழ்

ஏஜெண்ட் கண்ணாயிரம், காரி, பட்டத்து அரசன், பவுடர், ஆட்டோ ஈஸ் மை லைஃப், தோப்புக்கரணம், ஓட்டம், ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. மேலும் தெலுங்கில், மசோதா, மலையதளத்தில் ஷபிக்கிண்டே சந்தோஷம், இந்தியில் பெஹிடியா, ஆங்கிலத்தில் ஸ்ரேஞ்ச் வோல்ட், ஆங்கிலத்தில் பாடிஸ் பாடிஸ் பாடிஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

ஒடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் :

சோனி லிவ்வில் மீட் கியூட் (தெலுங்கு),  நெட்ஃப்ளிக்சில் காக்கி தி பீகார் சாப்டர் (இந்தி) ஜீ5-ல் ஹார் மகா ஹார் (பெங்காலி) தி ஹார்டியன் ஆஃப் தி கேலக்சி ஹாலிடே ஸ்பெஷல் (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்சில் தி லாஸ்ட் பேஷியன்ட் (பிரெஞ்ச்) ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

குறும்படங்கள் (ஹாட்ஸ்டார்)

இந்தி மொழியில், பெயின், துரோனாச்சாரியா, பிளிம்ஹிட், செகண்ட் மேரேஜ், தேர்டு சேன்சா உள்ளிட்ட குறும்படங்களும், சகா என்ற ஆங்கில குறும்படமும் வெளியாக உள்ளது.

வெப்சிரீஸ்கள்

ஆங்கிலத்தில் பிலெட், செக்ஸ், ராயல்டி, ஸ்பானிஷில் தி அன்பிரேக்கன் வாய்ஸ், ஆங்கிலத்தில் வெனஸ்டே, ஜப்பானிய மொழியில், பர்ஸ்ட் லவ்,  என்ற வெப் தொடர்கள் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. ஆங்கிலத்தில் வெல்கம் டூ சிப்பண்டல்ஸ் ஹாட்ஸ்டாரிலும், இந்தியின் கேர்ள்ஸ் ஹாஸ்டர் எஸ் 3 என்ற தொடர் சோனி லிவ்விலும் வெளியாகிறது.

திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு ஒடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்

காந்தாரா (தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் இந்தி) அமேசான் ப்ரைம் வீடியோவிலும், பிரின்ஸ் (தமிழ், தெலுங்கு) ஹாட்ஸ்டாரிலும், மலையாளத்தில் படவேட்டு நெட்ஃபிளிக்சிலும், இந்தியில் சுப் ஜீ 5-ல், குஜராத்தியில் சிகிலோஷோ நெட்ஃபிளிக்சிலும், வெளியாக உள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil and other language movie and web series release update