ரஜினியின் தர்பார் படத்திற்கு பின் படங்கள் இயக்காத ஏ.ஆர்.முருகதாஸ் தனது தயாரிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள ஆகஸ்ட் 16 1947 படத்திற்காக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து, ரமணா, ஏழாம் அறிவு, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், முருகதாஸ் மார்ககெட் வீழ்ச்சியை சந்தித்தது.
அதன்பிறகு சமீபத்தில் வெளியான த்ரிஷாவின் ராங்கி படத்திற்கு கதை எழுதிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது கவுதம் கார்த்திக் நடிப்பில் ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 7-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் முருகதாஸ் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
இது தொடர்பாக பிரபல இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், கூறுகையில்,
கடந்த சில ஆண்டுகள் கடினமான காலங்களில் யாரும் உதவிக்கு வராததால் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்பட நடிகர்கள் மீது கோபமாக இருந்ததாகவும், அதனால் தான் விலங்குகளை மட்டும் வைத்து படம் எடுக்க முடிவு செய்ததாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. இதை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அவை அனைத்தும் வதந்தி. இருப்பினும், விலங்குகள் மற்றும் ஒரு சில குழந்தைகளை முன்னணி கதாபாத்திரங்களாகக் கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டியில், ஏஆர் முருகதாஸ் திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். தனது முதல் படமான தீனா (2001) படத்திற்கு முன்பே ஃபேண்டஸி படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். குரங்கை வைத்து ஸ்கிரிப்ட் எழுதி முடித்த பிறகுதான் விலங்குகளை வைத்து படம் எடுப்பதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருப்பதை தெரிந்துகொண்டேன்."சர்க்கஸ் கலாச்சாரம் மறைந்து விட்டது அதனால் ஸ்கிரிப்டை என்ன செய்வது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, தீனாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் தனது கனவுத்திட்டத்தை தள்ளிவைத்துவிட்டு தீனா படத்தை இயக்க சென்றார்.
மேலும் தொற்றுநோய்களின் போது முருகதாஸ் சிஜிஐ (CGI) மற்றும் விஷுவல் எஃபெக்ட்களுடன் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தபோது அது இறுதியாக தற்போது மீண்டும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளேளன். “பல வருடங்களாக, இந்தப் படத்தை எப்படி செய்வது என்று யோசித்துக்கொண்டே இருந்தேன், இறுதியாக, அவெஞ்சர்ஸில் பணியாற்றிய டபுள் நெகட்டிவ் என்ற நிறுவனத்துடன் இணைந்தேன். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களுக்காக அவர்கள் பல ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளனர். அதனால், நான் அவர்களிடம் கதையைச் சொன்னேன், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூம் அழைப்புகள் (தொற்றுநோயின் போது) மூலம் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை நாங்கள் செய்து கொண்டிருந்தோம்.
இருப்பினும், பாலிவுட்டில் லாக்டவுன் மற்றும் தொடர் தோல்விகள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நிறுவனம் திட்டத்தை நிறுத்தி வைத்தது. படத்தில் சுமார் 20 நிமிடங்கள் ஒரு ஹீரோ ரோல் உள்ளது. நான் அக்ஷய் குமார் சாரிடம் கதையைச் சொன்னேன், அவர் சம்பளம் இல்லாமல் நடிப்பதாக கூறினார். அதற்குப் பதிலாக லாப-பங்கு வகை ஒப்பந்தத்தை அவர் விரும்பினார். இப்போது, அது இன்னும் முன் தயாரிப்பில் உள்ளது. கண்டிப்பாக ஒரு நாள் செய்வேன். இது எனது கனவு திட்டம் என்று கூறியுள்ளார்.
முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், ஆனால் அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக படத்தை உறுதிப்படுத்தவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“