தனது மனைவி குறித்து கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது வாங்கிய முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ள இவர், 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.
உலகளவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்று அவரது பதிவுகள் காட்டுகிறது. மேலும் சமீப காலமாக தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாக பலரும் கூறி வரும் நிலையில் ரஹ்மான் பல மேடைகளில் தமிழில் பேசி கலக்கி வருகிறார். அனைவரும் இந்தி கற்றுக்கொள் வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியபோது தமிழ் தாய் வாழ்த்து வெளியிட்டு பதிலடி கொடுத்தவர் ஏ,ஆர்,ரஹ்மான்.
காதலுக்கு மரியாதை🌺😍 https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023
இதனிடையே சமீபத்தில் விகடன் விருது நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்துகொண்ட ஏ,ஆர்.ரஹ்மானுக்கு கோப்பை வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொள்ள ஏ,ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் மேடைக்கு வந்தார். அப்போது கோப்பை வழங்கப்பட்ட பிறகு அவரது மனைவியை பேச சொன்னார்கள். அப்போது ரஹ்மான் இந்தியில் பேசாதீர்கள் தமிழில் பேசுங்கள் என்று சொன்னார்.
இதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ரஹ்மான் மனைவி சாய்ரா தனக்கு சரளமாக தமிழில் பேச வராது என்று கூறி ஆங்கிலத்தில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரஹ்மானுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அட ஆமாம் ல ? ப்ராஹ்மணர்கள் தமிழ் பேசினால் அவர்களை கிண்டலடிக்கவேண்டும், இங்கேயே பிறந்து வளர்ந்து வாழுபவர்களை வந்தேறி என்று தூற்ற வேண்டும், அது முற்போக்குத்தனம். தமிழரல்லாத மற்ற யாரை பற்றி பேசினாலும் அது பிற்போக்குத்தனம்.
— Kasturi (@KasthuriShankar) April 27, 2023
இதனிடையே நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த ரஹ்மான் காதலுக்கு மரியாதை என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil