பாக்யலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சுஜித்ராவுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. கோபி பாக்யா வேண்டாம் என்று ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனியாக இருந்தாலும், பாக்யாவின் அசுர வளர்ச்சி கோபியை சற்று யோசிக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அதே சமயம் ராதிகாவுடன் பாக்யா தங்கியிருக்கும் வீடிலேயே குடியேறியுள்ள கோபிக்கு பிரச்சனை மேல் பிரச்சனையாக இருக்கிறது. இதில் ராதிகாவுக்கும் கோபியின் அம்மா ஈஸ்வரிக்கும் இடையே நடக்கும் சண்டை சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகிறது. இதில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி – ராதிகா இருக்கும் இடையே சண்டை முற்றி ஈஸ்வரி ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ராதிகாவின் அம்மா போலீசுடன் வந்து பிரச்னையை தீர்த்து வைப்பது போல் அடுத்து வரும் எபிசோடுகள் அமைய உள்ளது. இதனால் பாக்யலட்சுமி சீரியல் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில். பாக்யாவின் (சுஜித்ரா) முன்னேற்றத்தை பார்த்து ஆச்சரியத்தில் உள்ள கோபி (சதீஷ்) தற்போது மாடர்ன் உடையில் அவரை கட்டிப்பிடித்தபடி கோபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்.. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்.. மலரே மலரே ஆராதனை செய்கிறேன்.. அழகே மலரே, அழகே மலரே என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் கோபி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதை ராதிகா பார்த்தால் உங்க நிலைமை என்னவாகும் தெரியுமா கோபி என்று கூறி வருகின்றனர். இதற்கு ஒரு ரசிகர் அப்போ ஏன் ராதிகாவை தேடி போனீங்க சார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”