/tamil-ie/media/media_files/uploads/2021/06/Baakiyalakshmi.jpg)
Baakiyalakshmi Serial Actor Viral Video : விஜய்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டாலும், பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கேற்ப ரசிகர்களும், தங்களது ஆதரவை தொடர்ந்து அளித்து வருகின்றனர். குடும்ப தலைவி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்த இந்த சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது பல தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
இந்த சீரியலில் முன்னணி கதாப்பாத்திரமாக பாக்யா, கணவன் கோபி, குழந்தைகள், மற்றும் மாமனார் மாமியார் என அனைவருடனும் வாழ்ந்து வரும்போது, கோபி மட்டும் தனது கல்லூரி தோழியான ராதிகாவுடன், குடும்பத்திற்கு தெரியாமல் பழகி வருகிறார். ஆனால் ராதிகாவும் பாக்யாவும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். ஆனாலும் இவர்களிடம் சிக்கி கொள்ளாமல் கோபி தொடர்ந்து தப்பித்துக்கொண்டே வருகிறார். இதனால் இந்த சீரியல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதில் அவர்கள் தங்களின் அன்றாட செயல்கள் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் பல பதிவுகள் இணையதளத்தில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ், அந்த சீரியலில் வேலைக்காரியாக நடித்து வரும் கம்பம் மீனா என்பவருடன் ரொமான்ஸ் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரைலாகி வருகிறது.
எஸ்.ஜே.சூர்யா சிம்ரன் நடிப்பில் வெளியான நியூ படத்தில் இடம்பெற்றுள்ள தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்ந்தேன் என என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவை கம்பம் மீனா செல்லமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பார்த்த நெட்டிசன்கள் "பாக்யா அக்கா இங்க வந்து இந்த அநியாயத்தை கொஞ்சம் வந்து பாருங்க" என கூறி இருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.