New Update
/indian-express-tamil/media/media_files/bDloSIEu0g0nb2T9Rbj0.jpg)
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் மகன் எழிலை வீட்டை விட்டு வெளியேற்றிய பாக்யா, மாமியார் ஈஸ்வரிக்கு சாதகமாக நடந்துகொண்ட நிலையில், அடுத்த வாரத்தில் என்ன நடக்கும் என்பது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
சின்னத்திரை சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கணவன் கைவிட்டபின் தனது 3 பிள்ளைகள் மருமகள்கள் மாமனார் மாமியார் என தனது குடும்பத்தை ஒரு பெண் எப்படி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறாள் என்பது குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் கடந்த வாரம் அமிர்தா குழந்தை பெற்றக்கொள்ளாதது குறித்து ஈஸ்வரி கேட்க, அமிர்தாவுக்க ஆதரவாக எழில் ஈஸ்வரியிடம் சண்டைபோட, பெரிய மோதல் உருவாகி வார்த்தைப்போர் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நீ இந்த வீட்டில் இருந்து வெளியில் போனால் உன்னால் வாழ முடியாது என்ற ஈஸ்வரி சொல்ல, கோபமான பாக்யா, எழிலை வீட்டை விட்டு வெளியில் போக சொல்கிறார். இதனால் எழில் அமிர்தா, நிலா மூவரும் வெளியில் சென்றவிட்டனர்.
இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் ஈஸ்வரியின் கணவ ராமமூர்த்தியின் 80-வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று பாக்யா சொல்ல, இந்த நிலைமையில் இந்த பிறந்த நாளை கொண்டாட எனக்கு விருப்பம் இல்லை என்று ராமமூர்த்தி சொல்கிறார். அதன்பிறகு எழில் வீட்டுக்கு வருவது பற்றி என்ன முடிவு பண்ணிருக்க என்ற ஈஸ்வரி பாக்யாவிடம் கேட்கிறாள்.
அதற்கு பாக்யா, எழிலுக்கு எப்போ தோணுதோ அப்போ வரட்டும். எப்போ வர வர வேண்டும் என்பது அவனுக்கு தெரியும் என்ற சொல்ல, ரூமுக்குள் இருக்கும் ஈஸ்வரி எழிலுக்கு போன் செய்து தாத்தா பிறந்த நாளக்கு வர சொல்ல, நான் வருவேன் பாட்டி நான் வந்தால் உங்களுக்கதான் ஒரு மாதிரி இருக்கும் என்று எழில் சொல்ல, ஆமாம் எனக்கு ஒரு மாதிரி இருக்கும் நீ வராதே என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு அழுகிறார் அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.