விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
பொருட்காட்சியில் கேண்டீன் திறந்து நன்றாக வியாபாரம் நடந்துகொண்டிருக்க, பாக்யா சமைத்த உணவு குறித்து கேண்டீனை விலைக்கு கேட்ட கோதண்டராமன் புகார் அளிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகரிகள் கேண்டீனில் சோதனை நடத்துகின்றனர். இதனிடையே பழனிச்சாமியும், எழிலும் இது குறித்து விசாரிக்க போக அங்கு கோதண்டராமன் தான் புகார் கொடுத்தது தெரியவருகிறது.
அவரது போட்டோவை பார்த்து எழிலுக்கு அடையாளம் தெரியாத நிலையில், போட்டோவை எடுத்து வந்து பாக்யாவிடம் காட்ட, இது கோதரண்டராமன் என்று பாக்யா கண்டுபிடித்துவிடுகிறாள். ராமமூர்த்தியும் இவன்தான் நம்ம வீட்டுக்கு வந்து கேண்டீனை விலைக்கு கேட்டது என்று சொல்ல, நம்ம மேல எந்த தப்பும் இல்லை எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா பிரச்சனை சரியாகிவிடும் என்று பாக்யா சொல்கிறார்.
அப்போது எப்படி அவ்ளோ உறுதியா சொல்றீங்க என்று கோதரண்டராமன் உள்ளே வருகிறான். அவனை பார்த்து செழியன் அடிக்க போக பழனிச்சாமி அவனை தடுத்துவிடுகிறார். விடுங்க தம்பி நமக்கு பல பிரச்சனை இருக்கு. இதுல புதுசா ஒரு பிரச்சனை வேண்டாம் என்று சொல்ல, நான் அன்னைக்கே வீட்ல வந்து பேசினேன் கேண்டீனை கொடுத்திருக்கலாம். இப்போ என்னாச்சி பார்த்தீங்களா என்று கேட்கிறான் கோதண்டராமன்.
இதனிடையே கேண்டீனை ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த மாதிரி சுத்தமான கேண்டீனை நாங்கள் பார்த்ததே இல்லை என்று பத்திரிக்கையார்களிடம் சொல்ல, நான் தான் புகார் கொடுத்தேன். இதுதான் ஆதாரம் என்று கோதரண்டராமன் சொல்கிறான். அப்போது பாக்யா இது எங்ககிட்ட வாங்கிய சாப்பாடே இல்லை என்று சொல்கிறார். ஆனால் இது உங்களிடம் வாங்கயது தான் என்று கோதண்டராமன் சொல்கிறான்.
இதை கேட்ட பாக்யா ஆதாரத்தை கொடுங்க என்று கேட்க, கோதரண்டராமன் முழிக்கிறார். பிறகு அனைவரும் கேள்வி கேட்க, அங்கிருந்து ஓடிவிடுகிறான். இதன்பிறகு கேண்டீன் திறக்கப்படுகிறது. இந்த விஷயத்தை செழியன் ராமமூர்த்தி இருவரும வந்து சொல்ல, கோபி ஷாக் ஆகிறான். ஆனால் மறுபுறம் ராதிகா சந்தோஷப்பட, அவரை தனியா அழைத்து சென்ற கோபி நீ எதுக்கு சந்தோஷப்படுற என்று விசாரிக்கிறான்.
நல்லது நடந்துருக்கு அதான் சந்தோஷம் என்று ராதிகா சொல்ல, அப்புறம் ஏன் உன் ஆபீஸ்ல இருந்து பாக்யாவை துரத்தின என்று கேட்க, அங்கு நான் அப்படி செய்ததால் தான் இப்போது பாக்யா இந்த உயரத்திற்கு வந்துருக்காங்க என்று சொல்கிறாள் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“