scorecardresearch

கோபியின் சட்டையை பிடித்த செழியன்… ஷாக்கான ராதிகா… இதெல்லாம் தேவைதானா?

பாக்யா இன்று பழனிச்சாமி வீட்டுக்கு சென்றதையும் அங்கு அவரது அம்மா பழனிச்சாமியின் கல்யாணம் குறித்து கவலைப்பட்டதையும் சொல்கிறார்.

Baakiyalakshmi
பாக்கியலட்சுமி சீரியல்

பாக்யாவின் நடத்தையை பற்றி தவறாக பேசும் கோபியை செழியன் எழில் இருவரும் சட்டையை பிடித்து அடித்ததால் குடும்பதே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

விஜய் டிவியின் முக்கிய சீரியலிகளில் ஒன்றாக பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோட்டில், எழில் ஈஸ்வரிக்கு காலை பிடித்து விடுகிறார். அப்போது நீ கல்யாணம் பண்ணதால வந்த கோபம் இன்னும் போகல என்று சொல்ல நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் உங்கள் காலை மற்றும் கொடுங்கள் என்று எழில் பிடித்து விடுகிறான்.

அப்போது அங்கு வரும் பாக்யா இன்று பழனிச்சாமி வீட்டுக்கு சென்றதையும் அங்கு அவரது அம்மா பழனிச்சாமியின் கல்யாணம் குறித்து கவலைப்பட்டதையும் சொல்கிறார். அதன்பிறகு ராமமுர்த்தியும் ஈஸ்வரியும் தங்களுக்கு தெரிந்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்கிறார்கள்.

இதனிடையே ராதிகாவை பார்க்க வரும் கோபியிடம் ஈஸ்வரி சொன்னதை ராதிகா கோபியிடம் சொல்கிறாள். இதனால் கோபமாகும் கோபி பாக்யா பழனிச்சாமியிடம் சிரித்து பேசியதாக நினைத்துக்கொண்டு நான் அம்மாவிடம் கேட்கிறேன் வா என்று ராதிகாவை கீழே அழைத்து வந்து ஈஸ்வரியிடம் ஏன்மா ராதிகாவை சும்மா திட்டிட்டே இருக்ககீங்க என்று கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி என் வீட்டில் இருந்தால் நான் திட்டுவேன் தான். பிடிக்கலனா வீட்டை விட்டு வெளியே போக சொல்லு என்று சொல்கிறார். பாக்யா பாக்யானு தலையில தூக்கி வச்சிட்டு ஆடுறீங்க அவ கீழ்த்தனமா என்னென்ன வேலை செய்கிறாள் தெரியுமா அவளை யாரும் எதுவுமு் சொல்றது கிடையாது என்று கோபி ஈஸ்வரியிடம் கேட்கிறார்.

க்ளாசுக்கு போறேனு சொல்லிட்டு இவ அந்த வளர்ந்த போஸ்ட் மரம் இருக்கான்ல அவன் வீட்டுக்கு போய் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வரா வீட்டில் போன் பேசிட்டு இருக்கா முடி வெட்டிக்கிட்ட இப்ப எதற்காக இவ அலங்காரம் பண்ணிக்கிட்டு இருக்கா? எல்லாம் அவன பாக்க போறதுக்காகத்தான் என்று சொல்கிறார்.

இதை கேட்டு கோபமாகும் எழில் எங்க அம்மாவை பற்றி எதாவது பேசுனா நடக்குறதே வேற என்று சொல்கிறார். அப்போது கோபி நீ கோப்பபடுற அளவுக்கு உங்க அம்மா யோக்கியமானவ கிடையாது என்று சொல்ல வார்த்தையை அளந்து பேசுங்க எங்க அம்மா வேவு பாக்குறீங்களா என்று கேட்க, அவ இந்த வீட்ல ஒரு பொறுப்புல இருக்கா, அவ எங்க போறா என்ன செய்யுறா என்று பார்க்கதான் செய்வேன் என கோபி சொல்கிறார்.

இதை கேட்டு பாக்யா இன்னொரு வார்த்தை பேசினா நடக்குறதே வேற என்று சொல்கிறார். அதை கேட்டு எனக்கெல்லாம் கோபம் வருதோ என்று கோபி கேட்க யோவ் என்னய்யா என்று எழில் கோபியின் சட்டையை பிடிக்க அப்போது ஒடி வரும் செழியன் எழில் கையை தட்டிவிட்டு கோபியின் சட்டையை பிடித்து ஓங்கி அறைய போகிறார். இன்னொரு வார்த்தை எங்க அம்மாவை பத்தி தப்பா பேசுனீங்க தொலைச்சுடுவேன் என்று சொல்கிறார்.

எங்க அம்மாவுக்கு கேட்க யாரும் இல்லை என்று மிரட்டுறீங்களா என்று கேட்க, கோபி பாக்யாவை பார்த்து என்ன கூட்டணி சேர்த்துருக்கியா என்று கேட்கிறார். தப்பு பண்றவங்களுக்குதான் அடுத்தவங்களையும் அப்படியே நினைக்க தோணும், இத்தனை வருஷமா யாருக்கும் எந்த தப்பும் பண்ணல துரோகம் பண்ணல. துரோகிகளை கூட நல்லவங்கனு நெனச்சு தான் பழகினேன் என்று பாக்யா பேசிவிட்டு கோபமாக கிளம்புகிறார்.

உங்க அம்மா என்னை திட்டிட்டாங்க வந்து என்னானு கேளுங்கனு இவ உன்ன ஏத்திவிட்டாள என்று கோபியிடம் ஈஸ்வரி கேட்க அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil baakiyalakshmi serial today episode update in tamil