scorecardresearch

Vijay TV Serial: கோபி- ராதிகா டைவர்ஸ்? ஈஸ்வரி சபதம்

உன்னை கோபியிடம் இருந்து பிரிந்து இந்த வீட்டை விட்டே விரட்டுகிறேன் என்று ஈஸ்வரி சவால் விடுகிறார்.

Baakiyalakshmi
பாக்கியலட்சுமி ஈஸ்வரி – ராதிகா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராதிகாவை கோபியிடம் விவாகரத்து வாங்கி வீட்டை விட்டு வெளியில் அனுப்புவேன் என்று ஈஸ்வரி சபதம் எடுத்துள்ளார்,

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், செல்வியும் அமிர்தாவும் கிச்சனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது கீழே வரும் ராதிகா சத்தம் அதிகமாக வைத்து டிவி பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பாகும் ஈஸ்வரி இது எங்க வீட்டு டிவி என்று சொல்லி சேனலை மாற்றுகிறார்.

இதனால் கடுப்பாகும் ராதிகா நான் தானே டிவி பார்த்துக்கொண்டிருக்கிறேன் நீங்கள் அப்புறம் பாக்கலாமே என்று சொல்ல நான் எப்போ வேணாலும் பார்ப்பேன் பிடிக்கலனா நிறுத்தியும் வைப்பேன். அதை கேட்க நீ யாரு என்று கேட்டு சண்டை போடுகிறார். அதன்பிறகு ராதிகா கிச்சனுக்கு வருகிறார்.

அப்போது வெந்நீர் எடுத்து வரும் செல்வியிடம் எனக்கு காபி வேண்டும் என்று கேட்கிறார் ஈஸ்வரி. கிச்சனில் ரெண்டு அடுப்பும் பிஸியாக இருக்கிறது என்று செல்வி ராதிகா சமைத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதனால் கோபமாகும் ஈஸ்வரி ரெண்டையும் எடுத்து வைத்துவிட்டு எனக்கு காபி போடு என்று சொல்கிறார்.

இதனால் ராதிகாவுக்கும் ஈஸ்வரிக்கும் சண்டை ஆரம்பிக்கிறது. அப்போது உன்னை கோபியிடம் இருந்து பிரிந்து இந்த வீட்டை விட்டே விரட்டுகிறேன் என்று ஈஸ்வரி சவால் விடுகிறார். உங்கள் வாயால என்னை மருமகள் என்று நான் கூப்பிட வைக்கிறேன் என்று ராதிகா ஈஸ்வரிக்கு சவால் விடுகிறார். ஆனால் அந்த நிலைமை வந்தால் நான் நாக்கை அறுத்துக்கொள்வேன் என ஈஸ்வரி சொல்லி விடுகிறார்.

இதன்பிறகு செழியன் ஆபீஸ் விஷயமாக க்ளைண்டை பார்க்க போக அந்த பெண் ஊழியர் உரிமையாக செழியனிடம் பேசுகிறார். இதனால் செழியன் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு வீட்டிற்கு வரும் கோபி பாக்யா தனது தோழியிடம் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகிறார். பாக்யா பழனிச்சாமியிடம் பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கும் கோபி, க்ளாஸல பேசினா அப்புறம் வீட்டுக்கு போன இப்போ போன்லயே பேச ஆரம்பிச்சிட்டா என்று புலம்புகிறார்.

அதன்பிறகு ரூமுக்கு வரும் கோபி, ராதிகா கோபமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க ஈஸ்வரியின் சவால் குறித்து ராதிகா சொல்கிறார். அந்த பாக்யா நல்லவமாதிரி நாடகம் ஆடிட்டு இருக்கா குடும்ப குத்துவிளக்கு மாதிரி நடிக்கிறா என்று கோபி சொல்ல இதையெல்லம் போய் உங்க வீட்டு ஆளுங்க கிட்ட சொல்லுங்க என்று ராதிகா சத்தம் போடுகிறார். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil baakiyalskhmi serial today episode update in tamil