நடிகர்கள் கூட ரியாலிட்டி செக் செய்யும் வகையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் குறித்து பொய்யான தகவல்கள் வெளியிடுவதை திரைப்பட தயாரிப்பாளர்கள் நிறுத்த வேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்
சென்னையில் நடந்த சிஐஐ டக்ஷின் சௌத் இந்தியா மீடியா அனட் எண்டடெய்ன்மெண்ட் சம்மட் 2023 (CII Dakshin South India Media and Entertainment Summit 2023) பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், பார்வையாளர்களிடம் பொய் சொல்ல விரும்பாததால் தமிழ் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை பகிர்வதை நிறுத்திவிட்டேன் என்றும் நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உண்மை ஒத்துவராது என்றும் கூறினார்.
“பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி பொய் சொல்ல வெட்கப்படுங்கள். ஒரு படம் தோல்வியடைந்தால் அதை சத்தமாகச் சொல்லுங்கள், அப்போதுதான் ஹீரோக்களுக்கு கொஞ்சம் புத்தி வரும். பாக்ஸ் ஆபிஸ் பற்றி பொய் சொல்லாதீர்கள். பாக்ஸ் ஆபிஸ் வசூலை மீடியாக்களுக்கு பகிர்வதை நிறுத்திவிட்டேன், ஏனென்றால் நான் பொய் சொல்வதில் வெட்கப்படுகிறேன். உண்மையான புள்ளிவிவரங்களைச் சொல்ல வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை கோபப்படுத்துவது போல் ஆகிவிடும். எனவே, நான் அனைத்தையும் ஒன்றாக நிறுத்திவிட்டேன். தயாரிப்பாளர்கள் பொய் சொல்வதை நிறுத்தினால், தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
திரைப்பட விநியோகஸ்தர் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் பணத்தை தங்கள் திரைப்படங்களின் சக்சஸ் மீட்க்கு செலவிடுவதை விட சிறந்த திரைப்படங்களை தயாரிப்பதில் முதலீடு செய்ய வேண்டும். இது தயாரிப்பாளர்களுக்கு எனது வேண்டுகோள்: உங்கள் வேலை ரசிகர்களை திருப்திப்படுத்துவது, ஹீரோக்களை திருப்திப்படுத்துவது அல்ல. வெற்றிக் கூட்டங்கள் மற்றும் அது போன்ற விஷயங்களுக்காக பணத்தை செலவழிக்காதீர்கள். பணத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூர் சுப்ரமணியம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் ரூ. 100 கோடி கிளப்பில் இருக்கும் என்று கருதப்பட்டாலும், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்களுக்கு லாபம் ஈட்டவில்லை என்று சுட்டிக்காட்டினார். அதில் குறிப்பாக ரஜினியின் கபாலி, விஜய்யின் பைரவா, சிவகார்த்திகேயனின் ரெமோ, தனுஷின் தொடரி மற்றும் கொடி, மற்றும் கார்த்தியின் காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை பட்டியலிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil