விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், வார இறுதிநாளான இன்றை எபிசோடு குறித்து வெளியான ப்ரமோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. ஜி.பி.முத்து, ரக்ஷிதா மகாலட்சுமி, அமுதவாணன் உள்ளிட்ட சிலர் மட்டுமே தெரிந்த முகங்களாக உள்ள இந்த நிகழ்ச்சியில் பல்வேறு புதுமுகங்கள் பங்கேற்றுள்ளனர். அதே சமயம் கடந்த சீசனிகளில் 40 நாட்களுக்கு மேல் தொடங்கிய பிரச்சினைகள் இந்த சீசனில் முதல் வரத்திலேயே அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வந்த ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிற்கு சென்றவுடன், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்த போட்டியாளர் வருவதற்கு 2 நாட்கள் ஆகும் என்று கமல்ஹாசன் கூறினார். இதனால் பயந்துபோன ஜி.பி.முத்து சார் நான் பாத்ரூம் போனால் கூட துணை இல்லாமல் போகமாட்டேன் என்று வெள்ளந்தியாக பேசியது வைரலானது.
அப்போது கமல்ஹாசன் இதுகே இப்படினா ஆதாம் வர வரைக்கும் ஏவால் எப்படி தனியாக இருந்திருப்பார் என்று கமல்ஹாசன் கேட்க அதற்கு ஜி.பி.முத்து ஆதாமா என்று மீண்டும் கமல்ஹாசனையே திரும்ப கேட்டிருந்தார்.இதனிடையே பிக்பாஸ் தொடங்கி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் வார இறுதி நாளான இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கிறார்.
இப்போது அனைவரையும் விசாரிக்கும் கமல், முத்து நீங்க எழுந்து நில்லுங்க என்று சொல்ல அவர் கையில் இது பாதாம் சார் என்று சொல்கிறார். அதற்கு கமல்ஹாசன் பாதாம் தெரியுது ஆதாம் தெரியலையா என்று கேட்க, ஜி.பி.முத்து மறுபடியும் ஆதாமா என்று கேட்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“