New Update
/indian-express-tamil/media/media_files/NWutAa8tjZ7LD36Ueg7W.jpg)
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் திருமணம்
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் திருமணம்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பி அகில் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் அகிலன் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அருண் பிரசாத், ரோஷ்னி ஹரிப்பிரியன், ரூபாஸ்ரீ, ஃபரீனா ஆசாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த தொடரில் பாரதியின் தம்பி அகில் கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அகிலன்.
இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். சினிமா வாய்ப்பு காரணமாக இவர் விலகியதாக கூறப்பட்ட நிலையில், விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அகிலன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியி்டு வருகிறார்.
ஆனால் திருமணம் குறித்து எவ்வித பதிவுகளையும் வெளியிடாத அகிலன் திடீரென தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதில் இப்போதுதான் எனக்கு திருமணம் ஆனது என்றும் குறிப்பிட்டுள்ளார். அக்ஷயா முரளிதரன் என்பரை காதலித்ததாகவும், எளிய முறையில் திருமணம் செய்துகொண்டதாகவும் அகிலன் கூறியுள்ளார்.
இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.