சினிமா மற்றும் சின்னத்திரையில் சாதிக்க நிறம் ஒரு தடையில்லை என்று அழுத்தமாக பதிவு செய்த முக்கிய நடிகைகளில் ஒருவர் வினுஷா தேவி. சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக மாறியுள்ளார்.

தனது நடிப்பு திறமைக்கு அங்கிகாரம் கிடைக்காத பலரும் தங்களது திறமையை டிக்டாக் போன்ற சமூகவலைதளங்களில் வெளிகாட்டி பிரபலமடைந்து வந்தனர். அந்த வகையில், டிக்டாக் மூலம் பிரபலமானவர்தான் வினுஷா தேவி. தற்போது டிக்டாக் செயலி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனலில் தங்களை ப்ரமோட் செய்ய தொடங்கினர்.
இதில் ஒரு சிலர் சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பு பெற்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் சமூகவலைதளங்களின் மூலம் சீரியலில் என்ட்ரி ஆனவர் வினுஷா தேவி.விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதில் நடித்து வந்த நாயகி ரோஷ்னி ஹரிப்பிரியன் திடீரென சீரியலை விட்டு விலகினார்.
இதன்பிறகு கண்ணம்மா ரோலில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அந்த வாய்ப்பை வினுஷா தேவி கமிட் ஆகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது பாரதி தான் கண்ணம்மாவை தவறாக புரிந்துகொண்டார் என்ற உண்மை தெரியவந்தை தொடர்ந்து கண்ணம்மா பாரதி விவாகரத்து முடிந்துவிட்டது.
ஆனாலும் மீண்டும் கண்ணம்மாவை திருமணம் செய்துகொள்ள பாரதி அவரை காதலிப்பதாக கூறி பின்னாடியே சுற்றிக்கொண்டு வருகிறார். இதனால் அடுத்து என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா தேவி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பக்தியுடன் இருப்பது போன்று இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil