/tamil-ie/media/media_files/uploads/2021/07/Bharahti-kannamma.jpg)
Tamil Serial Bharathi Kannamma Serial Promo : சின்னத்திரையில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் பிரைம்டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல வார இறுதயில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கியஇடத்தை பெற்று வருகிறது. மனைவி மீது சந்தேகப்பட்டு வீட்டை விட்டு அனுப்ம் பாரதி தற்போது ஹேமாவுக்காக அவளிடமே உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான். இதில் சென்றவாரம் பாரதி கண்ணம்மா இருவரும் சந்தித்து ஒரே இடத்தில் இருப்பது போன்ற காட்கள் வெளியானது.
மேலும் இருவரும்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் அமைர்ந்து சாப்பிடும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் இவரும் விரைவில் இணைய வேண்டும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் இணைந்து வரும் காட்சிகள் அதிகம் வருகின்றன.
மேலும் இவர்கள் இப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொள்ளும் அளவிற்கு தற்போது ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் கண்ணம்மாவீட்டிற்கு வர தயங்கிக்கொண்டிருந்த பாரதி தற்போது ஹேமாவை கூட்டிக்கொண்ட கண்ணம்மா வீட்டிற்கு வருகிறான். தனது மகளையும் கண்ணம்மாவிடம் ஒப்படைக்கிறார். கண்ணம்மாவும் ஹெமாவை அன்புடன் கட்டியனைக்கிறாள்.
தற்போது இந்த ப்ரமோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகளுக்கு ஒரு வித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.