பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில், முதல் நாளில் வெளியேற்றப்பட்ட சாச்சனா தற்போது, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ள ப்ரமோ வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. வழக்கமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் நாளில் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது பலரையும் கவர்ந்த நிலையில், கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்துவிட்டார் என்றும் கூறி வந்தனர்.
முதல்நாள் போட்டியாளர்கள் அறிமுகம் முடிந்த நிலையில், ரவீந்திரன் சந்திரசேர், ரஞ்சித், வி.ஜே.விஷால், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், அருண் பிரசாத் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், முதல் நாளில், அதிக வசதிகள் கொண்ட பிக்பாஸ் வீட்டில் தங்குவது யார் என்பது குறித்து ஆண்கள் பெண்கள் இடையே மோதல் எழுந்த நிலையில், ஆண்கள் அணி பெண்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, தங்களை நாமினேட் செய்யக்கூடாது என்று கூறியது.
இதற்கு பெண்கள் அணியும் ஒப்புதல் அளித்த நிலையில், அடுத்த நாமினேஷன் பிராசஸ் தொடங்கியது. இதில், ஆண்களை நாமினேட் செய்ய வேண்டாம் என்று சொன்னதை நான் தான் முதலில் ஏற்றுக்கொண்டேன். அதனால் நானே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று சாச்சனா முதல் நாளில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது தொடர்பான ப்ரமோ வெளியான நிலையில், டி.ஆர்.பிக்காக முதல் நாளில் எதாவது வித்தியாசம் நடக்கும் என்று பலரும் கூறியிருந்தனர்.
மேலும் முதல் நாளில் சாச்சனா வெளியேறினாலும், அவர் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வருவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது திடீரென 5-வது நாளில் சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி ஆகியுள்ளார். குறுக்கு வழியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர், பெட்டில் உட்கார்ந்திருப்பதை பார்த்த வி.ஜே.விஷால், ஏய் என்று அனைவரையும் அழைக்கிறார். அதன்பிறகு அனைவரும் அவரிடம் வந்து கட்டியணைத்து பேசுகின்றனர். தொடர்ந்து சாச்சனா அனைவரிடமும் பேசுகிறார்.
நான் வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தேன். இதில் லீஸ்ட் கண்டெண்ட் கொடுக்கிற பர்சன்ஸ் ரஞ்சித் சார், சத்யா வி.ஜே.விஷால் என்று சொல்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இது பருத்தி மூட்டை குடோன்லே இருந்திருக்கலாமே என்ற ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“