பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர், தற்போது பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. வழக்கமாக தொகுப்பளராக இருந்த கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக உள்ளே வந்துள்ளார். அதேபோல் நடிகர் ரஞ்சித், தீபக், தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர், சீரியல் நடிகர் அர்னவ், நடிகை பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா, வி.ஜே.விஷால் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாளில் இருந்தே விறுவிறுபாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், 24 மணி நேரத்தில், சாச்சனா வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு, சில நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் களமிறங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர். பேட்மேன் என்ற பெயருடன் பங்கேற்ற இவர், தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.
இந்த நேர்காணலில் அவர் பேசும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் ஆண்கள் அணி பெண்கள் அணி என்று பிரித்ததே தவறான ஒன்று. பெண்கள் ஆண்களை போல வலிமையானவர்கள் தான். ஆனால், அவர்களுக்கு உடல் ரீதியான ஒரு பாதிப்பு வரும்போது அவர்களை எதிர்த்து எப்படி விளையாட முடியும்? இன்னும் சொல்லப்போனால், போட்டியே ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் தான். ஆனால், அது தெரியாமல், அணிக்குள்ளே இருக்கும் நபர்களை ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்கிறார்கள்.
ரஞ்சித் சார், கண்ணா தங்கம் என்று சொல்வது எல்லாம் உண்மைதான். ஆனால் அவரும் சில சமயங்களில் ஃபேக்காக தான் இருந்துள்ளார். என்னை பற்றி பல உருவ கேலிகள் இருந்தது. தடியன் எல்லாம் சாப்பிட்டு விடுவான். சாப்பாட்டை தனியாக எடுத்து வையுங்கள் என்று எல்லாம் சொன்னார்கள். அதனால் தான் நான் ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இரவில் சாப்பிட்டேன். அப்போது கூட அர்னவ் என்னிடம் வந்து ஏன் நீங்கள் சாப்பிடவில்லை என்று கேட்டார். நான் என் நிலையை சொல்லி அனுதாபம் தேட விரும்பவில்லை. கேமரா முன் சென்று, எல்லோரும் அனுதாபத்திற்காக சிலவற்றை செய்கிறார்கள்.
பெண்களுக்கு எதிராக விளையாடும்போது எது செய்தாலும், தவறாக புரிந்துகொள்ளப்படுமோ என்ற பயம் இருந்தது. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததை என் மனைவியால் நம்பவே முடியவில்லை. நான் வெளியில் வரும்போது அவர் மூணாறு சென்றிருந்தார். கடந்த பிக்பாஸ் சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்து எல்லாம் ரெடியாவிட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் எனது அவசர வேலை காரணமாக அதில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதே சமயம் இந்த ஆண்டு கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்யக்கூடாது என்று நினைத்தேன். அப்படி இருந்தும் நான் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகும் அன்று என் அப்பாவுக்கு ஹார்ட் ஆப்ரேஷன். ஆனாலும் அவருக்கு பிக்பாஸ் விருப்பம் என்பதால் என்னை பங்கேற்க சொன்னார். அதன்பிறகு தான் நான் தைரியமாக உள்ளே வந்தேன். உள்ளே வந்தவுடன் பிக்பாஸிடம் கேட்டு என் அப்பா எப்படி இருக்கிறார் என்பது குறித்து தெரிந்துகொண்டேன். எனக்கு லெட்டர் மூலம் தெரியப்படுத்தினார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் ஆட்டம் முடியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் விரைவில் ரீ-என்டரி கொடுப்பேன். நான் எப்போது என்ட்ரி கொடுக்கிறேனோ அப்போது இருந்து தீபாவளி தான் என்று ரவீந்திரன் கூறியுள்ளார். இதன் மூலம் வைல்ட் கார்டு என்ட்ரியாக ரவீந்திரன் உள்ளே வரப்போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.