பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்காக விஜய் டிவியின் முக்கிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுளளது.
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது வழக்கம். அந்த வகையில், கடந்த 7 வருடங்களாக ரசிகர்கள் மனதை ஆட்கொண்டுள்ள ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். 15 போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் இருந்து தங்களுக்கு கொடுத்த டாஸ்க்குகளை எப்படி முடிக்கிறார்கள் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் வழக்கம்.
நிகழ்ச்சியின் பங்கேற்கும் 15 போட்டியாளர்களும், ஒவ்வொரு விதமாக மனநிலையில், இருப்பார்கள் என்பதால், போட்டி, மோதல், கருத்து வேறுபாடு, சண்டை என பல விறுவிறுப்பான தருணங்கள் நிறைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு விருந்தாகவும், யூடியூபர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் நிகழ்ச்சியாகவும் உள்ளது. கடந்த 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
விரைவில், 8-வது சீசன் தொடங்க உள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார், அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரமோக்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதியை பார்க்க, ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே வரும் அக்டோபர் 6-ந் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்காக, தற்போது விஜய் டிவியின் சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிற்பகல் 1 மணிக்கு பனிவிழும் மலர்வனம், 3.30 மணிக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி, 6.30 மணிக்கு மகாநதி, 7 மணிக்கு ஆஹா கல்யாணம், 7.30 மணிக்கு சின்ன மருமகள் ஆகிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“