Bigboss amil News : விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. ஆரி, பாலாஜி முருகதாஸ் , ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஆரி முதலிடத்தையும், பாலாஜி முருகதாஸ் 2–வது இடத்தையும் பிடித்தனர்.
மேலும் இந்த சீசனில் ஆரி நியாயமான நபராக அறியப்பட்ட நிலையில், அவருக்கு எதிர்ப்பதமாக சர்ச்சைகளை வாரி குவித்தவர் பாலாஜி முருகதாஸ். ஆரியுடன் சண்டை, சனம் ஷெட்டியிடம் சர்ச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது, ஷிவானியுடன் நெருக்கம் என பெரும் சர்ச்சைகளை உருவாக்கினார். இதனால் அவருக்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு 2-வது பரிசு கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நட்சத்திரங்கள் தங்களது அடுத்தக்கட்ட வேலைகளை தொடங்கியுள்ள நிலையில், பாலாஜிக்கு பல தனியார் மீடியா சார்பாக பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிகைண்ட்வுட் சார்பாக இவருக்கு பிக்கஸ்ட் சென்ஷேஷன் ரியாலிட்டி டெலிவிஷன் (Biggest Sensation On Reality Television) என்ற பட்டம் வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது இந்த பட்டத்தை திருப்பி கொடுக்கப்போவதாக பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பிகைண்ட்வுட் மேடையில் ரிவியூ என்ற பெயரில் மற்ற போட்டியாளர்களை பற்றி தவறாக பேசாதீர்கள். அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ரிவியூ அது எல்லாம் காந்தியோ மதர் தெராசாவோ இல்லனு தான் பேசினேன். ஆனால், அந்த வீடியோவை அவர்கள் ஒளிபரப்பவில்லை என்றும் கூறி தான் மேடையில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஆனால் பாலாஜியின் இந்த பேச்சுக்கு பதில் கொடுத்துள்ள சக பிக்பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி, என்னையும் இல்லாத பெண்களின் கேரக்டரைப் பற்றி பேசியபோது போட்டியாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லையா? அவ்வாறு தவறான வார்த்தைகளை பேசும் போதும் அல்லது என்னை அசிங்கப்படுத்திய போதும் இளம் பெண்களை பற்றி நீங்கள் யோசித்தீர்களா என்ன ? காணாமல் போன உங்களின் 2 நிமிட பெருமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil