புதிய அவதாரமாக மாறிய பிக்பாஸ் அர்ச்சனா : ரசிகர்கள் வாழ்த்து மழை

Bigboss VJ Archana Tamil News : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற தொகுப்பாளினி அர்ச்சனா தறபோது மிர்ச்சி எப்எம்-ல் ஆர்ஜேவாக இணைந்துள்ளார்.

சன்டிவியில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து சன்டிவியின் சில நிகழ்ச்சிக்கள், விஜய் டிவி ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி புகழ் பெற்ற இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் சில சர்ச்சைகளை சந்தித்தாலும், அன்பு தான் ஒருவரி்ன் அடையாளம் என அவர் தொடர்ந்து கூறிக்கொண்டு இருந்ததும் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த அவர், விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதுவரை விஜேவாக இருந்த அர்ச்சனா தற்போது ஆர்ஜேவாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

மிர்ச்சி எப்எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக களமிறங்கியுள்ள அர்ச்சனா, ‘ஹை சென்னை வித் அர்ச்சுமா’ என்ற காலை ஷோவை வழங்க இருக்கிறார். காலை 7 மணி முதல் 12 மணி வரை வாரத்தின் 6 நாட்கள் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், அர்ச்சானா இன்று முதல் தனது பணியை தொடங்கியுள்ளார். இந்த செய்தியை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் “Cheers to nee beginnings!! Starting off a new journey as the Breakfast Rj on “Hi Chennai with Achuma – Attakaasam Unlimited” !! @mirchitamil. Send me your love” என அர்ச்சனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு மிர்ச்சியின் மார்னிங் ஷோ செய்து வந்த அஸ்வினி அர்ச்சனாவை வரவேற்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil bigboss vj archana join new rj in mirchi fm

Next Story
சுனிதாவின் இன்ஸ்டா போஸ்ட்… கவிதையை கிறுக்கும் ஃபேன்ஸ்…cook with comali sunitha
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express