பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், அடுத்து 2-வது வாரத்தில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதனிடையே 2-வது வாரத்தில் யார் வெளியேற்றப்படலாம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இளைஞர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் தற்போது பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என இரு வீடுகளும், 2 நாமினேஷன்களும் நடந்து வருகிறது. இதனால் நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில், அடுத்து 2-வது வாரத்தில் அடியெடுத்து வைக்க உள்ளது. இனி வரும் நாட்களில் எலிமினேஷன் தொடங்க உள்ள நிலையில், முதல் வாரத்தில் யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்து நெட்டிசன்களின் வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுளளது.
அதன்படி, 42 சதவீதத்திற்கு மேலான நெட்டிசன்கள் இந்த வாரம் அனன்யா ராவ் வெளியேற வேண்டும் என்றும், 39 சதவீதம் பேர், ஜோவிகா வெளியேற வேண்டும் என்றும், பவா செல்லதுறை வெளியேற வேண்டும் என்று 35 சதவீதம் பேரும், பிரதீப்க்கு எதிராக 33 சதவீதம் பேரும், யுகேந்திரனுக்கு எதிரான 32 சதவீதம் பேரும், ரவீனாவுக்கு எதிரான 19 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஜோவிகா, ரவீனா மற்றும் பிரதீப் ஆகிய மூவரும் பலமான போட்டியாளர்கள். அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு முடிவுகளின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், தொகுப்பாளர் கமல்ஹாசன் என்ன சொல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதனிடையே கல்வி தொடர்பாக நடிகை விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இதில் ஹவுஸ்மெட்ஸ் பலரும் ஜோவிகாவுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில் விசித்ரா கண்ணீரில் மூழ்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“