/indian-express-tamil/media/media_files/HIBNdg2mlL2MhOsN6bZx.jpg)
கமல்ஹாசன் - பிரதீப் ஆண்டனி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப் ஆண்டனி, தற்போது தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், தனது பதிவில் அவர் பயன்படுத்தியுள்ள ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5-வது வார இறுதியில், பெண் போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்ட சிலர் பிரதீப் எதிராக உரிமை குரல் எழுப்பினர். இதில் அவரால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, தூங்குவதற்கு பயமாக இருக்கிறது என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன், மற்ற போட்டியாளர்கள் முடிவையும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, இறுதியாக கண்ஷப்ஷன் அறைக்கு வந்த பிரதீப்பிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் நீங்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று சண்டை போட வேண்டாம். இப்படியே வெளியில் வாருங்கள். உங்கள் லக்கேஜ் உங்களுக்கு வரும் என்று கூறியதை தொடர்ந்து பிரதீப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிரதீப் ரெட் கார்டுடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
Big fan sir @ikamalhaasan ❤️ Sathiyama soldren ❤️
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 7, 2023
Wish you the happiest 69th birthday. I have the utmost respect for your art and contributions to Tamil Cinema. Love you 😘#NallaIrunga#TheeraVisaripatheMeihttps://t.co/4UH1jF44Gj
இதனிடையே கமல்ஹாசன் பிறந்த நாள முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிரதீப் ஆண்டனி, உங்களது பெரிய ரசிகன் சார் சத்தியமா சொல்கிறேன். உங்களுக்கு 69-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு உங்கள் கலை மற்றும் பங்களிப்புகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் நல்லா இருங்க மற்றும் தீர விசாரிப்பதே மெய் என்ற இரு ஹேஷ்டேக்களை சேர்த்து பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.