Advertisment

பணப்பெட்டியுடன் வெளியேறிய விசித்ரா? எதிர்த்த பிரதீப் ஆண்டனி : உண்மை என்ன?

டிக்கெட் டூ ஃபினாலே முறையில் இந்த வாரம் பணப்பெட்டியுடன் யார் வெளியேறுவார் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

author-image
WebDesk
New Update
Vichithra 12

பிக்பாஸ் விசித்ரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விசித்ரா, நேற்று இரவு பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. 80 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில், முதல் நாளில் இருந்தே அதிக கவனம் ஈர்த்தவர் தான் விசித்ரா. இவர் தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 

இதனிடையே டிக்கெட் டூ ஃபினாலே முறையில் இந்த வாரம் பணப்பெட்டியுடன் யார் வெளியேறுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்த விஜய் வர்மா, மற்றொரு வைல்ட் கார்டு என்டரி தினேஷ், பூர்ணிமா, மணி ஆகியோரில் யாராவது பணப்பெட்டியுடன் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த பணப்பெட்டியில் 9 லட்சம் வரை பணம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று மாறாக 13 லட்ச ரூபாய் இருந்துள்ளது.

இந்த பணம் இந்த பணம் 15 லட்சமாக மாறட்டும் என்று பலரும் காத்திருந்த நிலையில், 13 லட்சம் பணத்துடன், விசித்ரா வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் டைட்டில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விசித்ரா, தன்னைவிட அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோருக்கு ஆதரர் அதிகம் இருக்கிறது என்பதை அறிந்துள்ளார். அதே போல் மாயாவுக்கு கமல்ஹாசன் சப்போர்ட் இருக்கிறது.

இதை உணர்ந்துகொண்ட விசித்ரா கண்டிப்பாக நமக்கு டைட்டில் கிடைக்காது என்பதை உறுதி செய்துகொண்டு, நேற்று இரவு 11 மணியளவில் அவர் பணப்பெட்டியுடன் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு அவர் வெளியேறியதற்காக காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

விசித்ராவின் இந்த செயலுக்கு முன்னாள் போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவர் செயலில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment