Advertisment

ஹீரோவாக பிக்பாஸ் விஷ்ணு? தமிழில் ரீமேக் ஆகும் தெலுங்கு படம் : தீயாய் பரவும் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில், 4-வது இடம் பிடித்த நடிகர் விஷ்ணு வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார்.

author-image
WebDesk
New Update
Vishnu Vijay Biggboss

பிக்பாஸ் விஷ்னு விஜய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் விஷ்னு அடுத்து ஒரு ரீமேக் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். விஜய் டிவியின் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் சமூகவலைதள பிரபலங்கள் என பலரும் பங்கேற்பது வழக்கம். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவதோடு மட்டுமல்லாமல, சின்னத்திரை மற்றும் வெள்ளத்திரையில் தங்கள் திறமைக்கு ஏற்ப வாய்பினை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில், 4-வது இடம் பிடித்த நடிகர் விஷ்ணு வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் 15-க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், கடைசி நாள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த விஷ்ணு 4-வது இடம் பிடித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனது.

விஜய் டிவியின் 'கனா காணும் காலங்கள்', 'ஆபீஸ்' மற்றும் ஜீ தமிழின் 'சத்யா' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான விஷ்ணு, வெள்ளித்திரையில், 'மாப்பிள்ளை சிங்கம்' மற்றும் 'கொரில்லா' போன்ற படங்களிலும் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இதனிடையே 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'சி லா சௌ' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு ஹீரோவாக நடிக்க நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இவர் ஹீரோவாக நடித்திருப்பதை காண ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் உற்சாகத்தையும் தெரிவித்து வருகின்றனர். சுஷாந்த் மற்றும் ருஹானி ஷர்மா நடித்துள்ள இந்த படம் ஒரு அழகான காதல் கதையாகும். ராகுல் ரவீந்திரன் இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

biggboss Vishnu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment