Advertisment
Presenting Partner
Desktop GIF

கிடுக்குப்பிடி போட்ட கமல்ஹாசன்... சரண்டர் ஆன ஜோவிகா : என்ன நடந்தது?

பிக்பாஸ் போட்டியாளர்களே அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், வெளியில் இருந்தும் ஜோவிகாவுக்கு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Jovika Kamal haasan

கமல்ஹாசன் - ஜோவிகா விஜயகுமார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில்,  இதில் பங்கேற்றுள்ள வனிதாவின் மகள் ஜோவிகாவுக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் போட்டியாளர்கள் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியின் முதல் நாளில் படிப்பு முக்கியமில்லை என்று இவர், பேசிக் படிப்பு ரொம்ப முக்கியம் என்று விசித்ரா சொல்ல இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதன்பிறகு சில நாட்கள் தனியாக விளையாடி வந்த ஜோவிகா அதன்பிறகு மாயா மற்றும் பூர்ணிமாவின் கோஷ்டிக்குள் புகுந்துவிட்டார். இதனால் பிக்பாஸ் போட்டியாளர்களே அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், வெளியில் இருந்தும் ஜோவிகாவுக்கு விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ஆனால் ஜோவிகாவின் அம்மா வனிதா விஜயகுமார் தனது மகளுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே, நேற்று தொகுப்பாளர் கமல்ஹாசன் எபிசோடு வந்தது. இதில் ஆரம்பம் முதலே ஜோவிகாவை கலாய்ப்பது போல் பேசிய கமல்ஹாசன், சர்க்கரை எடுத்து ஒளித்து வைத்தது, மைக் கழற்றி வைத்து விட்டு பேசியது குறித்து கேட்டார். இதற்கு பதில் அளித்த ஜோவிகா விளையாட்டாக செய்ததாக சொல்ல, கமல்ஹாசன் இதில் கூடவா விளையாட்டு என்று சொல்லும் அளவுக்கு ஒரு ரியாக்ஷன் கொடுத்தார்.

ஆனாலும் ஜோவிகா செய்தது குறித்தே கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் சாரி சார் என்று சொல்லி இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment