Advertisment

நிக்சனை வெளியேற்ற முயற்சி... பிரிந்து விளையாடும் மாயா - பூர்ணிமா : பிக்பாஸ் ப்ரமோ வைரல்

பூகம்பம் டாஸ்க்கை தொடர்ந்து, எதிர் எதிர் துருவங்களாக இருந்த மாயா – விசித்ரா இருவரும் இணைந்துவிட்டனர். அதே சமயம் விசித்ராவுக்கும் அர்ச்சனாவும் எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர்.

author-image
WebDesk
New Update
Poornima Maaya

பிக்பாஸ் ப்ரமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிக்சன் கேப்டனாக இருக்கும் நிலையில்அவரை எலிமினேட் செய்ய மாயா பூர்னிமா இருவரும் தங்களது ப்ளானை செயல்படுத்தி வருவது தற்போது ப்ரேமோவில் தெரியவந்துள்ளது.

Advertisment

கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நாள் தோறும் பெரும் சண்டை வெடித்து வருகிறது. இதில் மாயா நிக்சன் பூர்ணிமா ஆகியோர் ஒரு கேங்காவும்விசித்ரா அர்ச்சனா ஆகியோர் மற்றொரு கேங்காவும் மோதிக்கொண்டுள்ளனர்.  அதன்பிறகு பிக்பாஸ் அளித்த பூகம்பம் டாஸ்க்கை தொடர்ந்து, எதிர் எதிர் துருவங்களாக இருந்த மாயா விசித்ரா இருவரும் இணைந்துவிட்டனர்.

அதே சமயம் விசித்ராவுக்கும் அர்ச்சனாவும் எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர். இதனிடையே சென்ற வாரம்விஜய் வர்மா ரீ-என்டரி கொடுத்த நிலையில், ஆர்.ஜே.பிராவோ வெளியேற்றப்பட்டார். மேலும் மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு கமல்ஹாசன் கடுமையாக கண்டித்திருந்தார். தொடர்ந்து இந்த வாரம் கேப்டனாக இருக்கும் நிக்சனின் செயல்பாடு யாருக்கேனும் திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர் கேப்டன்சி பறிக்கப்படும் என்று பிக்பாஸ் கூறியிருந்தார்.

மேலும் அவர் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிக்சன் எலிமினேஷன் அதற்கான வேலையை பார்ப்போம் என்று மாயா – பூர்ணிமா இருவரும் ரகசிய ப்ளான போட்டதை தொடர்ந்து இன்று தங்களது ப்ளானை செயல்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், எதிர் துருவங்களாக பிரிந்த மாயா பூர்ணிமா இருவரும் பேசிக்கொள்கின்றனர். இதில் மாயா பூர்ணிமாவிடம் நீங்கள் நிக்சனை நல்ல காப்பாத்துறீங்க என்று கூறியுள்ளார்.

இதற்கு பூர்ணிமா உங்களுக்கு என்னங்க பிரச்சனை என்று கேட்க, இருவரும் மாறி மாறி பேசிக்கொள்கின்றனர். இதனிடையே நீங்க சொன்ன மாதிரியே நிக்சனை காப்பாத்துறீங்க என்று சொல்ல, விஷ்ணு நிக்சனுக்கு எதிராக மணி அடிக்க செல்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. பூர்ணிமா மாயா இருவரும் பேசி வைத்துக்கொண்டு நிக்சனை வெளியேற்ற சிறப்பாக வேலை செய்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment