தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களை ஜோவிகா மரியாதை இல்லாமல் பேசிய ப்ரமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் 2 நாமினேஷன்கள் என பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், எழுத்தளரும் நடிகருமான பவா செல்லதுரை இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறிவிட்டார்.
18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், முதல் நாளில் இருந்தே கவனம் ஈர்த்து வருபவர் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார். முதல் நாளில் விசித்ராவுடன் படிக்கு தொடர்பான மோதலில் தொடங்கி பலமுறை வீட்டில் உள்ளவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் மற்ற போட்டியாளர்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது ஸ்மால் பாஸ் வீட்டுக்கும் பிக்பாஸ் வீட்டுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருசிலர் மோதலில் இருந்தாலும் இதில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் ஒருசிலர் கண்டுகொள்ளாததது போல் செயல்பட்டு வருகின்றனர். ஆனாலும் 2 வீடுகளும் தற்போது ரணகளமாகி வரும் நிலையில், கேப்டன் சரவண விக்ரம் நடுவில் மாட்டிக்கொண்டு விழித்துக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே நிகழ்ச்சியின் 12-வது நாளான இன்று வெளியாகியுள்ள ப்ரமோவில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான மெனுவை போர்டில் எழுதி வைத்துவிட, இதை பார்த்து ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கடுப்பாகின்றனர். இதனால் சமைக்க முடியாது என்று ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சொல்ல இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் பிரதீப், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஜோவிகா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் 6 பேர் இங்கு வேலை செய்கிறோம். அதில் ஏன் குறை சொல்கிறீர்கள் என்று பிரதீப் கேட்க, 3 வேளை சாப்பாடு நாங்கள் எது கேட்டாலும் நீங்கள் செய்துகொடுக்க வேண்டும் என்று ஜோவிகா சொல்ல, அப்படினா நீ எங்களை அடிமை மாதிரி நடத்துவியா என்று பிரதீப் கேட்கிறார்.
தொடர்ந்து நாங்கள் மனுஷங்க தான் என்பதை மறந்து போய்விட்டீங்க உங்களுக்கு என்ன கவலை என்று பிரதீப் கூட,சட்டுனு ஜோவிகா, ஆமாண்டா, நான் சாப்பாட்டை வேஸ்ட் பண்றேனு வச்சிக்கோ நீ ஏன் சமைக்க மாட்டேனு சொல்ற என்று கேட்க வேலை செய்யாததால் தான் அந்த வீட்டில் இருக்க புரியுதா உனக்கு என்று கேட்கிறார். இதற்கு பிரதீப் கண்டெண்ன்ட் நீங்க என்று கேட்க, அது உன் பிரச்சனை கிடையாது என்று ஜோவிகா சொல்ல, அதேபோல் சமைப்பதும் உன் பிரச்சனை இல்லை என்று பிரதீப் சொல்ல ப்ரமோ அத்துடன் முடிகிறது.
ஏற்கனவே படிப்பு விஷயத்தில் மரியாதை இல்லாமல் பேசிய ஜோவிகா தற்போது பிரதீப் மற்றும் விஷ்ணு ஆகியோர் வயதில் பெரியவர்கள் என்று கூட பார்க்காமல் டா சொல்லி பேசியது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“