பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இன்று பிக்பாஸ் வீடு அரண்மனையாகவும், கேப்டன் நிக்சன் அரசராகவும் இருக்கும் நிலையில், பேட்டியாளர்களுக்கு அவர் தண்டனை வழங்கும் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளில் இருந்தே, பெரும் சண்டை வெடித்து வருகிறது. குறிப்பாக விசித்ரா அனைவருடனும் நட்பில் இருக்க விரும்புகிறார் என்று அவரின் நடவடிக்கைகள் தெரிவிக்கிறது. ஆனால் அவரை எதிர்த்து மாயா கேங் செயல்பட்டது. அதன்பிறகு பிக்பாஸ் அளித்த பூகம்பம் டாஸ்க்கை தொடர்ந்து, மாயா – விசித்ரா இருவரும் இணைந்துவிட்டனர்.
பூகம்பம் டாஸ்க்கு முன்பு விசித்ராவுடன் நெருக்கமாக இருந்த அர்ச்சனா தற்போது பிரிந்துவிட்டார். சென்ற வாரம், விஜய் வர்மா ரீ-என்டரி கொடுத்த நிலையில், ஆர்.ஜே.பிராவோ வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து இந்த வாரம் கேப்டனாக இருக்கும் நிக்சனின் செயல்பாடு யாருக்கேனும் திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர் கேப்டன்சி பறிக்கப்படும் என்றும் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்றும் பிக்பாஸ் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மாயா – பூர்ணிமா இருவரும் நிக்சனை வெளியேற்ற ப்ளான போட்ட நிலையில், இன்றைய ப்ரமோவில், பிக்பாஸ் வீடு அரண்மனையாகவும், நிக்சன் மகாராஜாவும் இருக்கும் நிலையில், விக்ரம் ரவீனா, ஜோவிகா உள்ளிட்ட 3 பேருக்கு மழையில் முட்டிப்போட வைக்க சொல்கிறார் நிக்சன் மகாராஜா. இதை கேட்ட விசித்ராவிடம் இதுதான் என் ஆட்சி சர்வாதிகாரம் என்று பதில் சொல்கிறார்.
அதன்பிறகு அவர்கள் மூவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லி கையை தூங்க சொல்லுங்கள் என்று சொல்கிறார். அதன்பிறகு நான் சொல்வதை செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
தற்போது வெளியாகியுள்ள மற்றொரு ப்ரமோவில், விஷ்ணு – அர்ச்சனா இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் விஷ்ணு இங்க இருக்க முடியலனா எகிறி குதிச்சி வெளியில போய்டுங்க, நீங்க ஒரு தண்டம் சிம்பிளி வேஸ்ட் என்று சொல்ல, பதிலுக்கு அர்ச்சனா அப்போ நீங்க வந்து என்று டஸ்ட் பின்னை எடுத்து காட்டுகிறார்.
இதை பார்த்து இதுக்குள்ள போக போறீயா என்று கேட்க, உள்ளே உங்களை வைத்து தான் வெளியில் அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார் அர்ச்சனா. தொடர்ந்து சுத்தம், தண்டம், வேஸ்ட் என்று விஷ்ணு சொல்ல, ஏ போ, போயா என்று அர்ச்சனா சொல்விடுகிறார். அதற்கு பெட்சீட்டை போர்த்திக்கிட்டு அழுவு என்று விஷ்ணு சொல்கிறார்.
இதை கேட்டு அர்ச்சனா சவால் விடும் வகையில் நான் அழுதுட்டேனா பார்த்துக்குறேன் உனக்கே இவ்வளவு இருக்கும்போது எனக்கும் இருக்கும் என்று சொல்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.