'பெரிய ரூல் ப்ரேக் நடந்துருக்கு'... மணியடித்த மாயா : அதிர்ச்சியில் நிக்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Biggbss Maya rule

பிக்பாஸ் மாயா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நிக்சனை வெளியேற்ற மாயா – பூர்ணிமா ரகசியமாக திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில், நிக்சனின் கேப்டன்சியில் தனக்கு அநீதி நடந்துவிட்டதாக மாயா அந்த மணியை அடித்துள்ளார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில்முதல் நாளில் இருந்தேபெரும் சண்டை வெடித்து வருகிறது. குறிப்பாக விசித்ரா அனைவருடனும் நட்பில் இருக்க விரும்புகிறார் என்று அவரின் நடவடிக்கைகள் தெரிவிக்கிறது. ஆனால் அவரை எதிர்த்து மாயா கேங் செயல்பட்டது. அதன்பிறகு பிக்பாஸ் அளித்த பூகம்பம் டாஸ்க்கை தொடர்ந்துமாயா – விசித்ரா இருவரும் இணைந்துவிட்டனர்.

தொடர்ந்து இந்த வாரம் கேப்டனாக இருக்கும் நிக்சனின் செயல்பாடு யாருக்கேனும் திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர் கேப்டன்சி பறிக்கப்படும் என்றும் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்றும் பிக்பாஸ் கூறியிருந்தார்.அதனைத் தொடர்ந்து மாயா பூர்ணிமா இருவரும் நிக்சனை வெளியேற்ற ப்ளான போட்ட நிலையில்பூர்ணிமா நிக்சனுக்கு ஆதரவாவும், மாயா நிக்சனுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே இன்றைய ப்ரமோவில், கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். அப்போது மாயா அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து ரூல் ப்ரேக் செய்தவிட்டார். அவர் உள்ளே வராலாம் என்பதற்கு ஃப்ரூப் காட்டுங்க என்று கேட்கிறார். காலையில் உங்க கண் முன்னாடி ரூல் பிரேக் நடிக்கும்போது கூல் சிரேஷ் என்பதால் நீங்கள் கேட்கவில்லை என்பது தான் என் அநீதி.

Advertisment
Advertisements

ஒரே மழையா இருக்கு நான் உள்ளே வரட்டுமா என்று மாயா கேட்க, உள்ளே வரக்கூடாது என்று நிக்சன் சொல்ல, மாயா ஏன் என்று கேட்கிறார். அது ரூல் பிரேக் என்று நிக்சன் சொல்ல, மாயா நீதி நடந்தாக அந்த மணியை அடித்துவிட்டு பெரிய ரூல் பிரேக் நடந்துள்ளது என்று சொல்கிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: