பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் 3 கடினமான டாஸ்க்கள் கொடுத்து இதில் வெற்றி பெற்றால் வீட்டில் இருக்கலாம் இல்லை என்றால் வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டிற்கு வருவார்கள் இங்கிருந்து போட்டியாளர்கள் வெளியில் சென்றுவிடுவார்கள் என்று கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisment
கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நாள் தோறும் பெரும் சண்டை வெடித்து வருகிறது. இதில் மாயா நிக்சன் பூர்ணிமா ஆகியோர் ஒரு கேங்காவும், விசித்ரா அர்ச்சனா ஆகியோர் மற்றொரு கேங்காவும் மோதிக்கொண்டுள்ளனர். இதில் அவ்வப்போது ஒருவர் குறித்து மற்றொருவர் புரளி பேசுவதும், ஆக்ரோஷமாக சண்டை போடுவதும் என் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக வைத்துள்ளனர்.
இதனிடையே கடந்த வாரம் ஐஷூ வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் வெளியேற்றத்திற்கு காரணம் விசித்ரா தான் என்று கூறி நிக்சன் அவரிடம் சண்டை போட்டதும், அதற்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் விளக்கம் அளித்த்தும் சுவாரஸ்யமாக இருந்த்து. அதனைத் தொடர்ந்து இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த பாடகர் கானா பாலா வெளியேற்றப்பட்டார். வந்த்தில் இருந்து எவ்வித தாகத்தையும் ஏற்படுத்தாத அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்பது போல் இருந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், பிக்பாஸ் வீட்டில் பூகம்பம், டாஸ்க் ஒன் என்று குறிப்பிட்டு, பந்தை வைத்து ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ். இதில் விளையாடும் விக்ரம் அர்ச்சனா, மற்றும் பிராவோ ஆகியோர் வென்றார்களா தோற்றார்களா என்று குறிப்பிட்டு ப்ரமோ முடிவடைகிறது. இதில் ஹவுஸ்மெட்ஸ் வெல்வார்களா? அல்லது முன்னாள் போட்டியாளர்கள் உள்ளே வருவார்களா என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“