பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய எபிசோட்டில்,ஐஷு, விஜய் மற்றும் நிக்சன் ஆகியோருக்கு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படும் ஒருவரை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் அக்ஷயாவைத் தேர்வு செய்த நிலையில், அவர் உடனடியாக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பட்டார். அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நேரடியாக நாமினேஷன் ஆவார்.
Advertisment
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ஷோகேஸ்களில், பிக் பாஸ் 'பிபி ஆக்ஸிஜன்' என்ற புதிய டாஸ்க்கை அறிவித்துள்ளர். பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் Vs ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இடையே போட்டியில், போட்டியாளர்களான விஷ்ணுவும் - விஜய்யும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். விஜய் விசுவை தள்ளினார், அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை தொடர்ந்து பிக் பாஸ் உடனடியாக டாஸ்க்கை நிறுத்தினார்.
நிகழ்வுகளின் திருப்பத்தால் அதிர்ச்சியடைந்த ஹவுஸ்மேட்கள், விஷ்ணு மற்றும் விஜய்யைச் சுற்றி கூடி அவர்களின் நன்றாக இருக்கிறார்களா என்று பார்த்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக பிக்பாஸ் வீடு பதட்டத்தின் உச்சமாக உள்ளது. தொடர்ந்து பிக் பாஸ் விஷ்ணு மற்றும் விஜய்யை வாக்குமூலம் அறைக்குள் அழைத்து அவர்களின் நடத்தையை பற்றி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டது.
அதன்பிறகு இரு போட்டியாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, வீட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தியது. மூன்றாவது வார எலிமினேஷனுக்கு விசித்ரா, நிக்சன், மாயா, சரவணன், பிரதீப், பூர்ணிமா, மணி, வினுஷா, ஐஷு, விஜய் மற்றும் அக்ஷயா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
பிக் பாஸ் தமிழ் 7 இன் வரவிருக்கும் எபிசோட் வீட்டிற்குள் ஆரம்ப மோதல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகளைக் காட்டுகிறது. இன்றைய எபிசோடில் போட்டியாளர்கள் சவால்களை எவ்வாறு கையாள்கிறார்கள் மற்றும் அவர்களது வேறுபாடுகளை அவர்களால் சமாளிக்க முடியுமா என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“