பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சின் இன்றைய ப்ரமோவில் கூல் சுரேஷ் சொன்னதை கேட்டு மாயா கண்கலங்கி அழும் காட்சி வெளியாகியுள்ளது.
Advertisment
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக இரு வீடுகள் இரட்டை நாமினேஷன் என வித்தியாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. முந்தை சீசன்களை விட அதிகமான இளைஞர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் 18 போட்டியளார்கள் உள்ளே வந்தனர்.
இதில் முதல் வாரத்தில் நடிகை அனன்னயா எலிமினேட் ஆகிவிட்ட நிலையில், அடுத்த இரு தினங்களில் எழுத்தாளரும் நடிகருமான பவா செல்லதுரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் 16 போட்டியாளர்கள் விளையாடி வரும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஸ்மால்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் செய்த ஸ்ரைக் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனிடையே இந்த அனைவரும் சண்டை இல்லாமல் அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர். இதில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோவில் கூல் சுரேஷ், அனைவருக்கும் ராசிபலன் சொல்கிறார். இதற்கு முன்னதாக நடிகை விசித்ராவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய கூல் சுரேஷ் ஒவ்வொருத்தருக்கும் ராசிபலன் சொல்லி வருகிறார். காமெடியாக தொடங்கிய கூல் சுரேஷ் இறுதியில் மாயாவை அழ வைத்துவிட்டார்.
மறைஞ்சிருந்து பார்க்கும் மாயா நீ இந்த பக்கம் கொஞ்சம் வாயா.. வேணா மாயா பயங்கர காண்டா பாக்குரா என்று சொல்ல, ராசிபலன் முடிந்து கூல் சுரேஷை சந்திக்கும் மாயா நீங்கள் என்ன பற்றி சொன்ன நிறைய விஷயம் எனக்கு புடிக்கல... உங்களுக்கு க்ளாப்ஸ் வரணும்னு நீங்க ஒன்று பண்றீங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போகும் மாயா அழுது கண்ணீர் வடிக்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“