/tamil-ie/media/media_files/uploads/2023/06/Dinalakshmi-biggboss.jpg)
பிக்பாஸ் தனலட்சுமி
பொதுமக்கள் என்ற அடையாளத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனலட்சுமி இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், தற்போது அவர் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. அதிலும் ஆண்டு தோறும் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக வலம் வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது.
இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற 6-வது சீசனில் பொதுமக்களில் ஒருவர் என்ற அடையாளத்துடன் கலந்துகொண்டவர் தனலட்சுமி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் பல்வேறு ஆடிஷன்களில் பங்கேற்று இறுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வ செய்யப்பட்டார். மேலும் பிக்பாஸ் வீட்டு சென்றவுடன் முதல் சர்ச்சையை தொடங்கியவரில் முக்கியமானவராகவும் இருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Dinalakshmi.jpg)
இந்த சீசனில் நடிகர் அசீம்க்கு அடுத்து அதிக சர்ச்சை மற்றும் மோதலில் சிக்கிய இவர், அசல் கோளாரு ஆன்டி என்று அழைத்ததும், அசீம் பொம்மை டாஸ்கில் நடந்துகொண்ட விதமும் பெரும் சர்ச்சையாக வெடித்தாலும் இதில் தனலட்சுமி நடந்துகொண்டது நியாயம் தான் என்று பலரும் கூறியிருந்தனர். இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் இருந்ததால் 70 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடித்து விளையாடினார்.
இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு ரூபாய் 11 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கியா சோனட் கார் வாங்கியுள்ள தனலட்சுமி இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காரின் விலை ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.