Tamil Cinema Update : நீலம் படையில் மார்கழி மக்கள் இசை என்ற நிகழ்ச்சியில், பிக்பாஸ் புகழ் இசைவாணி அப்பேத்கர் புகழ் குறித்து பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து அவரது ரசிகர்கள் இசைவாணி தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் என்று புகழ்ந்து வருகினறனர்.
கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5-வது சீசனில் பல புதுமுக நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் கானா பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த இசையவாணியும் ஒருவர். பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி ஆகும்போதே ஒரு மோட்டிவேஷ்னல் கானா பாடலை பாடி தொகுப்பாளர் கமல்ஹாசனையே அதிரவிட்ட இசைவாணி பிக்பாஸ் வீட்டில் தனது பாட்டு திறமையை வெளிக்காட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாடல் பாடாத இவர், விளையாட்டை சரியாக விளையாடவில்லை தனது கருத்தை ஆழமாக வெளிக்கொண்டு வரவில்லை என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். ஆனாலும் 50 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த இசைவாணி தற்போது வெளியேறியுள்ள நிலையில், மீண்டும் தனது கானக்குரலில் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக பாடலை பாடி மகிழ்வித்து வருகிறார். சமீபத்தில் பாடலுடன் சேர்ந்து இவர் நடனமாடிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது.
பிக்பாஸ் வீட்டில் பாடல் பாடாமல் ரசிகர்களை ஏமாற்றிய இசைவாணி திறமையை அதற்குரிய இடத்தில் தான் காட்ட வேண்டும் என்பது போல ரசிகர்களை தனது பாடல் மூலம் மகிழ்ச்சியில் திண்டாட வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னை விமர்சனம் செய்பவர்களை கண்டுகொள்ளாத இசைவாணி தொடர்ந்து தனது திறமையை வைத்து முன்னேறி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மார்கழி மக்கள் இசை நிகழ்ச்சியில் அப்பேத்கர் குறித்து பாடிய பாடல் வைரலாகி வருகிறது.
இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலரும் இசைவாணியை புகழ்ந்து பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஒரு சில நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் இதைப்பற்றி கண்டுகொள்ளாத இசைவாணி தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil