முன்னாள் கணவர் மீது பிக் பாஸ் இசைவாணி புகார்: போலீஸ் விசாரணை

Tamil Bggboss Update : மார்கழி மக்கள் இசை குழுவுடன் தனது கானா திறமையை வெளிப்படுத்தி வரும் இசைவாணி சமீபத்தில் அம்பேத்கர் புகழ் குறித்து பாடியா பாடல் வைரலானது

Bigg Boss Isaivani Complaint Against Ex-Husband : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கானா பாடகி இசைவாணி தனது முன்னாள் கணவர் குறித்து புகார் அளித்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கியது. பல புதுமுகங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் கானா பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இசைவாணி கலந்துகொண்டார். 100 நாட்கள் கொண்ட இந்நிகழ்ச்சியில் சுமார் 50 க்கு மேற்பட்ட நாட்களை கடந்த இவர், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து மார்கழி மக்கள் இசை குழுவுடன் தனது கானா திறமையை வெளிப்படுத்தி வரும் இசைவாணி சமீபத்தில் அம்பேத்கர் புகழ் குறித்து இவர் பாடிய கானா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இசைவாணி சக கானா சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது இசைவாணி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த இசைவாணி தனது முன்னாள் கணவர் குறித்து புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகாரில், விவாகரத்து பெற்ற முன்னாள் கணவரான சதீஷ் என்கிற பப்லு இசைவாணி என்ற பெயரில்,  சமூகவலைதளத்தில் போலி கண்க்கு உருவாகி அதன்மூலம் மோசடி செய்துள்ளதாகளும், பல இசை நிகழ்ச்சிகளுக்கு முன்பணம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விவாகரத்து பெற்ற சதீஷ் வேறொரு பெண்னை மணந்துகொண்ட நிலையில், இப்போதும் தன்னை தனது மனைவி என்றும் இசை நிகழ்ச்சிகளில பாட வைக்கிறேன் என்றும் கூறி பணம் பெற்றுள்ளதாகவும், பணம் கொடுத்தவர்கள், தன்னிடம் வந்து பணம் கேட்பதாகவும் கூறியுள்ள இசைவாணி, இதனால் தனக்கும் தனது கலை பயணத்திற்கும் இடையூறு ஏற்படுவதாகவும், இது தொடர்பாக சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிகழ்வு தற்போது வைரலாக பரவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil bigg boss contestant shivani complaint against ex husband

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express