துணிக்கடை சேல்ஸ்மேன்… பிக் பாஸ் தாமரைச்செல்வி கணவருக்கு இவ்ளோ சாதாரண வேலையா?

TamilBiggboss Update : சக போட்டியாளர்களுடன் சண்டையிடக்கூடாது என்று கூறிய அவர், இவர்களால் தான் நீ இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறாய்

Biggboss Thamari Selvi Update In Tamil : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியள்ள நிலையில், போட்டியாளர்களின்உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு விசிட் அடித்து வருகினறனர். அந்த வகையில் பிக்பாஸ் விட்டிற்கு வந்த போட்டியாளர் தாமரைச்செல்வியின் கணவர் குறித்து தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த அக்டோபர் 03-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக பல புதுமுகங்கள் பங்கேற்றுளள இந்நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகினறனர். 80 நாட்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ வீட்டிற்கு விசிட்டி அடித்து வருகினறனர்

ஏற்கனவே அக்ஷரா, பிரியங்கா, ராஜூ, சஞ்சீவ், வருண் ஆகிய போட்டியாளர்களின் உறவினர்கள் வந்துவிட்டு சென்றுள்ள நிலையில், தற்போது போட்டியாளர்கள் தாமரைச்செல்வியின் கணவர் மற்றும் அவரது மகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தெருக்கூத்து கலைஞரான தாமரைச்செல்வி, ஒன்றும் தெரியாமல் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து தற்போது 80 நாட்களை கடந்துள்ளார்.

தொடக்கத்தில் சகபோட்டியாளர்களிடம் விபரங்களை கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி நடந்துகொண்ட தாமரை தற்போது அனைத்து போட்டியாளாளையும் விட சிறப்பாக விளையாடி வருகிறார். இவரின் திறமையை பார்த்து தொகுப்பாளர் கமல்ஹாசனே வியந்து பாராட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஃபிரீஸ் டாஸ்கின்போது தாமரையின் கணவர் மற்றும் மகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர்.  

முதலில் வீ்ட்டிற்குள் வந்த மகனை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட தாமரை முத்த மழை பொழிந்தார். அதன்பிறகு உள்ளே வந்த தாமரையின் கணவர் பார்த்தசாரதி மனைவியை இன்முகத்துடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அதன்பிறகு போட்டியாளாகள் அனைவரிடமும் சகஜமாக பழகிய பார்த்த சாரதி பாவனியை பிடிக்காது என்று சொன்ன மனைவி தாமரையை கண்டித்தார்.

மேலும் சக போட்டியாளர்களுடன் சண்டையிடக்கூடாது என்று கூறிய அவர், இவர்களால் தான் நீ இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறாய் என்று கூறினார். அதன்பிறகு தாமரை உறவினர்கள் பற்றி விசாரித்ததும் அதற்கு அவரது பார்த்தசாரதி அனைவரும் நலமாக இருப்பதாக கூறினார். மேலும் நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடு என்றும் கூறியுள்ளார்.   

இந்நிலையில், தாமரையின் கணவர் தற்போது எங்கு வேலை செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தாமரையின் கணவர் பார்த்த சாரதி துணிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இந்த தகவல் தற்போது வைரலாக பரவி வரும் நிலையில்,   தாமரை பிக்பாஸ் வீட்டிற்கு வந்தநேரம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரட்டும் என்று வாழ்த்து்ககளை கூறி வருகினறனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil bigg boss contestant thamarai husband working salesman in update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com