/tamil-ie/media/media_files/uploads/2023/03/Balaji-Murugadoss.jpg)
தமிழ் செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், தன்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம் அப்படி இழுக்க நினைத்தால் தாங் மாட்டீர்கள் என்று முதல்வர்ரை டேக் செய்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் சீசன் 4-ல் 2-வது இடம் பிடித்த இவர், பிக்பாஸ் வீட்டில் நடிகர் ஆரியுடன் இவர் மோதலில் ஈடுபட்டது பரபரப்பின் உச்சமாக இருந்தது. சீசன் 4-ல் 2-வது இடம் பிடித்தாலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
தற்போது சினிமா வாய்ப்புகளை பெற்று வரும் பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் ’தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது, ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவிட்டு இந்த பதிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலாஜி முருகதாஸ் மீண்டும் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘குடியால் என்னை போன்ற பலர் அனாதையாகியுள்ளனர். ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தான் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
There are more Orphans in TN like me.
Who lost their family to alcohol.
Don’t pull me into politics.
You can’t handle .— Balaji Murugadoss (@OfficialBalaji) March 25, 2023
மேலும் என்னை தயவு செய்து அரசியலுக்கு இழுக்காதீர்கள், அவ்வாறு இழுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.