/tamil-ie/media/media_files/uploads/2022/05/Devayani.jpg)
Tamil Bigg boss Frame Vanitha Vijayakumar Entry In Colors Tamil Serial : கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது புது அர்த்தங்கள் சீரியலில் நடிகை தேவயானியுடன் பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் இணைந்துள்ளார்.
தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் சீரியல் ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் டிவியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது புது புது அர்த்தங்கள் சீரியல். தொடக்கம் முதலே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த தேவையான முன்னணி கேரக்டரில் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.
விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பிக்பாஸ் வனிதா விஜயகுமார் புதிய கேரக்டர் ஒன்றின் மூலம் இந்த சீரியலில் அறிமுகமாகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற வனிதா தற்போது சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார்.
லட்சுமி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த புது புது அர்த்தங்கள் சீரியலில், விதவையான லட்சுமி தனது குடும்பத்தை எப்படி கவனித்துக்கொள்கிறாள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
மகன் மாமனார் என அனைவரையும் கவனித்துக்கொள்ளும் லட்சுமி மகிழ்ச்சியாக இல்லாத நிலையில், அவரது மகன் சந்தோஷின் திருமணத்திற்குப் பிறகு, மருமகள் பவித்ரா, லக்ஷ்மியின் வாழ்க்கையில் ஒரு சிறிய மகிழ்ச்சியைக் கொண்டுவர போராடுகிறாள். அதே சமயம் உணவகம் வைத்திருக்கும் ஹரி கிருஷ்ணன், லக்ஷ்மியைக் கவனித்து அவரை காதலிக்கிறார். அதன்பிறகு இவர்கள் வாழக்கையில் என்ன நடந்தது என்பதே இந்த சீரியலின் கதை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.