ஃபைனலா வனிதாவுக்கு ஜோடி கிடைச்சிடுச்சு’ யாருன்னு பாருங்க!

Actress Vanitha Tamil News : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தற்போது நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஜோடி கிடைத்துள்ளது.

விஜய் டிவியில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவரும், பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்காக இந்த வார ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சின்னத்திரை மற்றும் சினிமாவில் உள்ள  சில பிரபலங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொடக்கத்தில் ஒற்றுமையான இருந்தாலும் போக போக அவர்களுக்கு இடையே பெரும் பிரச்சினை வெடிக்கும். அதிலும் இதில் கொடுக்கப்படும் டாஸ்க் பொரும் மக்களை கவர்ந்து வரும் நிலையில், பல கோடி பார்வையாளர்கள் இதனை பார்த்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஜித், கேபி உள்ளிட்ட சில போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த சில வாரங்களாக இந்நிகழ்ச்சி தடை செய்யப்பட்டிருந்த்து. தற்போது கொரோனாவில் இருந்து அனைவரும் மீண்டு வந்த நிலையில், ஊரங்கிலும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் முதல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழச்சியின் ஷூட்டிங் தொடங்கியதாக அறிவிக்கப்ட்டது.  

இந்நிலையில் நிகழ்ச்சியின் இந்த வார் எபிசோடின் ப்ரொமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ள்ளது. இதில்,  தாடி பாலாஜி பிக் பாஸ் ஷோ பற்றி பேசும்போது ‘எந்த குப்பை வந்தாலும் ஏத்துக்கணும்’ என கூறி உள்ளார். பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் இதற்கு முன் தனியாக தான் பங்கேற்று வந்த நடிகை வனிதா விஜயகுமார் எனக்கு ஜோடி எங்கடா என ஒருமுறை கேட்டிருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில், இந்த வாரம் அவரது ஜோடியாக சுரேஷ் சக்கரவர்த்தி வந்திருக்கிறார்.

அதை பார்த்து ஃபைனலா வனிதாவுக்கு ஜோடி கிடைச்சிடுச்சி போல இருக்கு’ என நடுவராக இருக்கும் ராமயா கிரிஷ்ணனே கூறியள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil bigg boss jodigal reality show vanitha committed to her pair

Next Story
இங்கு தான் பெண் ஆணைத் தேடுகிறாள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com