Advertisment

பிரபல சீரியலில் பிக் பாஸ் ஜூலி: என்ன ரோல் தெரியுமா?

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி இடத்தை பெற்றார்.

author-image
WebDesk
Jun 27, 2022 16:40 IST
பிரபல சீரியலில் பிக் பாஸ் ஜூலி: என்ன ரோல் தெரியுமா?

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி மன்னர் வகையாறா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில். தற்போது அவர் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Advertisment

தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணி சேனல்களிலர் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தவமாய் தவமிருந்து. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது.

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற மார்க்கண்டேயன் - சீதா என்ற தம்பதி தங்களது பிள்ளைகளிடம் இருந்து எதிர்கொள்ளும் சிரமங்களை அடிப்படையாக வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் இந்த சீரியலில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், பிக்பாஸ் நடிகையான ஜூலி,இந்த சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார்.ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி இடத்தை பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜூலி இறுதிக்கட்டத்தில் தனது செயல்கள் மூலம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதன்பிறகு சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட ஜூலி தற்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Julie #Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment