Advertisment

கமல் எச்சரிக்கையை மீறிய ஜி.பி.முத்து? : அமுதவாணனை இப்படி சொல்லிட்டாரே !

ஜி.பி.முத்துவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், முதல் நாளில் இருந்து அவர் செய்யும் அலப்பறைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
கமல் எச்சரிக்கையை மீறிய ஜி.பி.முத்து? : அமுதவாணனை இப்படி சொல்லிட்டாரே !

இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. விஜய் டிவியின் தினமும் இரவு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி டிஸ்னி+ஹாஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisment

வழக்கத்திற்கு மாறாக முதல் நாளில் இருந்தே பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்ப எழுந்துள்ளது. அதேபோல் பங்கேற்றுள்ள 20 போட்டியாளர்களில், ஜி.பி.முத்து, ஆயிஷா அமுதவாணன், மற்றும் ரக்ஷிதாஉள்ளிட்ட சிலர் மட்டுமே ரசிகர்கள் மத்தியியில் சற்று பிரபலமானவர்களாக உள்ளனர்

இதில் டிக்டாக் வலைதளம் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், முதல் நாளில் இருந்து அவர் செய்யும் அலப்பறைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இதனிடையே அவர் பிக்பாஸ் வீட்டில் நுழையும்போது யூடியூப்பில் பேசுவது போன்று பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியிருந்தார்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ஜி.பி.முத்து அமுதவாணனை தான் யூடியூப் வீடியோவில் திட்டுவது போன்று திட்டுகிறார். இதனால் கமல் எச்சரித்தும் ஜி.பி.முத்து அந்த எச்சரிக்கையை மீறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இந்த ப்ரமோவில் ஜி.பி.முத்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அப்போது தனலட்சுமி ஜி.பி.முத்துவை பார்த்தாலே காண்டாகுது என்று சொல்லிவிட்டு நேராக கேமராவுக்கு அருகில் சென்று ஜி.பி. முத்து மட்டும் இதை செய்துவிட்டு (கைகளை உயர்த்தி) மொத்த டீமும் இதை செய்தது போல் பேர் வாங்கி தரப்போகிறார் என்று சொல்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gp Muthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment