/tamil-ie/media/media_files/uploads/2022/09/Biggboss-6.jpg)
காடும்... காட்டு விலங்குகளும்... பிக்பாஸ் வீடு இதுதானா? வைரல் புகைப்படங்கள்
பிக்பாஸ் ப்ரமோவில், தொகுப்பாளர் கமல்ஹாசன், விக்ரம் படத்தில் வருவது போல் காடு மான் புலி சிங்கம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Biggboss-6.jpg)
Advertisment
விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வரும் 9-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள வீட்டில் வரைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் முன்னணியில் உள்ள விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முன்னணி நடிகரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் டிவி மற்றும் இணையத்தில் பிரபலமாக உள்ள நபர்கள் போட்டியாளர்களாக பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 9-ந் தேதி முதல் 6-வது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ள இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க உள்ளனர் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனியாக ஒரு இடத்தில் வித்தியாசமான செட் அமைத்து அதில் படப்பிடிப்பு நடத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான பிக்பாஸ் ப்ரமோவில், தொகுப்பாளர் கமல்ஹாசன், விக்ரம் படத்தில் வருவது போல் காடு மான் புலி சிங்கம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பார். இந்த ப்ரமோவில் குறிப்பிட்டுள்ளது போல பிக்பாஸ் வீடு தற்போது விலங்குகளில் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
#BiggBossmarathi4 nice #BiggBossTamil6 #BiggBossTamil #kamalhassan #vijaytelevision #BiggBoss #DisneyPlusHotstar #vijayTV #BIGGBoss6 #BiggBoss6Tamil #பிக்பாஸ் #பிக்பாஸ்6 pic.twitter.com/rmH8P3GJ27
— BiggBossTamil6 (@BBTamilNadu) October 2, 2022
தமிழ் பிக்பாஸ் வீடு என்று வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் உண்மையிலேயே தமிழ் நிகழ்ச்சிக்காத்தானா என்பது குறித்து சிறு சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மராத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதேபோன்று செட் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், போட்டியாளர்கள், பிக்பாஸ் வீடு, ப்ரமோ உள்ளிட்ட பலதகவல்களுக்காக ரசிகர்கள் பெரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.