பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக சமீபத்தில் வெளியான ப்ரமோக்களில் தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் அதிகாரப்பூர்வ தேதி அறிக்கப்பட்டுள்ளது.
Advertisment
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், பல்வேறு சுவாரஸ்யமாக நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனுக்கான ப்ரமோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வந்தது. அதே சமயம் வழக்கம்போல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீடு இல்லாமல் இரு வீடுகள் உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பது தொடர்பான பல பட்டியல்கள் இணையத்தில் அதிகம் உலா வந்துகொண்டிருக்கின்றன. இதனிடையே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனுக்காக புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் வீடே ரெட்டாச்சு இப்போ எல்லமே ரெண்டு எண்டர்டெயின்மண்டும் ரெண்டு. ரெண்டுல ஒன்று பார்த்துலாம். ரெண்டையுமே பார்த்திடலாம் என்று கமல் பேசுகிறார்.
இந்த ப்ரமோவின் இறுதியில் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“