பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், நிகழ்ச்சியின் 2-வது நாளான இன்று நாமினேஷன் சுற்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன் நேற்று (அக்டோபர் 1) தொடங்கியது.
வழக்கத்திற்கு மாறான பெரும்பாலான இளைஞர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பாவா செல்லத்துரை மற்றும் விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களில் முதல் வாரத்திற்குப் பிறகுதான் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள். முதல் வாரத்தில் நாமினேஷன் இருக்காது. நடப்பு சீசனில் இரு வீடுகள் மற்றும் இரட்டை நாமினேஷன் முறை அமலுக்கு வந்துள்ளதால் 'பிக் பாஸ் 7' முதல் நாளிலேயே டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.
இதில் பெரும்பாலான பிரபலங்கள் வனிதா விஜயகுமாரின் மகளாக ஜோவிகாவை நாமினேஷன் செய்துள்ளது.
விஜய் வர்மா, பாவா செல்லத்துரை, அனன்யா ஆகியோரையும், விசித்ரா அனன்யா, ஐஷு ஆகியோரையும், யுகேந்திரன், ரவீனா, அனன்யா ஆகிய இருவரையும், மாயா கிருஷ்ணன் ரவீனா, நிக்சன் ஆகிய இருவரையும், விஷ்ணு பாவ செல்லத்துரை, ஐஷு ஆகிய இருவரையும், ஜோவிகா ஐஷு, ரவீனா ஆகிய இருவரையும், சரவண விக்ரம்: நிக்சன், அனன்யா ஆகியோரையும், அக்ஷயா உதயகுமார் ரவீனா, ஐஷு ஆகிய இருவரையும் நாமினேஷன் செய்துள்ளனர்.
தொடர்ந்து மணிச்சந்திரா பாவா செல்லத்துரை, அனன்யா ஆகிய இருவரையும், பிரதீப் ஆண்டனி: விஷ்ணு தேவி, அனன்யா ஆகியோரையும், பூர்ணிமா ரவி: ஐஷு, அனன்யா ஆகியோரையும், கூல் சுரேஷ்: ஐஷு, பாவா செல்லத்துரை ஆகியோரையும், விஷ்ணு தேவி: யுகேந்திரன், மாயகிருஷ்ணன் ஆகியோரையும், நிக்சன்: பிரதீப் ஆண்டனி, ஜோவிகா ஆகியோரையும், ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன் ஆகியோரையும், ஐஷு - ஜோவிகா, பிரதீப் ஆண்டனி ஆகியோரையும், அனன்யா: ஜோவிகா, யுகேந்திரன் ஆகிய இருவரையும், பாவா செல்லத்துரை: கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி ஆகியோரையும் நாமினேஷன் செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“